பக்கம்:அசோகர் கதைகள்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதை இரண்டு

33

கும் பரப்பி வருகிறார். அவருடைய வாசகத்தின் உண்மையை உணர்ந்து கொள்ள நீ இன்னும் அனுபவம் பெற வேண்டும். அதற்கு நீ உன்னையே தியாகம் செய்து கொண்டு சோதனையில் ஈடுபட வேண்டும்.

அவருடைய சொற்கள் அழுத்தமாக இருந்தன. அவை இளைஞன் மனத்தில் ஆழமாகப் பதிந்தன. அவருடைய சொல் எதையும் மீறிப் பேச வேண்டுமென்று அவனுக்குத் தோன்றவேயில்லை.

தம்பீ, நான் உனக்கொரு வழி சொல்லுகிறேன். அந்த முறையில் நீ சோதனை செய்து பார். இந்தச் சோதனைகளுக்காக நீ மூன்று ஆண்டுகள் ஒதுக்கினால் போதும். என் சொல்லை நம்பி நீ உன் வாழ்க்கையில் மூன்று ஆண்டுகள் செலவிட முன் வருகிறாயா?” என்று அவர் கேட்டார்.

முன் அறிமுக மில்லாதவராக இருந்தாலும் அவரை நம்ப வேண்டும் என்று ஒர் உள்ளுணர்ச்சி கூறியது.

"சொல்லுங்கள்" என்றான் மகாலிங்க சாஸ்திரி.

"முதலில் உன் பைத்தியக்கார அண்ணனைப் போய்ப் பார். பைத்தியக்கார விடுதியிலிருந்து, நீ இருக்கும் இடத்திற்கு அவனை அழைத்துக் கொண்டு வந்துவிடு. அவனை உனக்கு மேலானவனாக மதித்து மரியாதை செய். அன்பு காட்டு. ஆதரித்துக் காப்பாற்று. ஓர் ஆண்டுக்குப் பிறகு சித்திரை மாதத்து முதல் வெள்ளிக்கிழமையன்று இதே இடத்தில் என்னே வந்து பார். அப்போது நான் அடுத்த சோதனையைப் பற்றிக் கூறுகின்றேன்" என்றார் அந்தக் குடியானவர்.

“சரி” என்றான் இளைஞன். அந்தச் சொல்லை அவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை அந்தக் குடியானவருக்கு
அ–3.