உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அசோகர் கதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதை இரண்டு

35

"அவன் பைத்தியமாயிற்றே, வேண்டாம்" என்று முதலில் மறுத்தாள். பிறகு நான் ஒரே பிடிவாதமாயிருந்ததால் ஒப்புக் கொண்டாள். அவளும் எனக்குத் துணையாக வீட்டில் வந்திருந்து அண்ணனைக் கவனித்துக் கொள்ள முன் வந்தாள். நான் அண்ணனைப் பைத்தியக்காரனாகக் கருதாமல் அன்பும் மரியாதையும் காட்டி நடந்து கொண்டேன். இதைக் கண்டு என் தாயும் அவனிடம் அன்பாக நடந்து கொண்டாள். பிள்ளைப்பாசம் அப்போதுதான் அவளுக்கு ஏற்பட்டது. எங்கள் அன்பு கிடைக்கத் தொடங்கியபின், அண்ணனுடைய பைத்தியம் சிறிது சிறிதாகத் தெளிய ஆரம்பித்தது. இப்போது அவன் முற்றிலும் தெளிந்தவனாகி விட்டான். ராஜகிரியில் உள்ள ஒரு கோயில் மடப்பள்ளியில் அவன் வேலை பார்த்து வருகிறான்” என்று சொல்லி முடித்தான் இளைஞன்.

"சரி, அடுத்த சோதனையை நான் இப்போது சொல்லுகிறேன். நீயும் உன் மூன்றாவது அண்ணனும் இப்போது உங்கள் இரண்டாவது அண்ணனைப் போற்றி நடக்க வேண்டும். ஓராண்டுக்குப் பிறகு இதே சத்திரத்தில் சித்திரை மாதத்து முதல் வெள்ளிக்கிழமையன்று என்னை வந்து பார்" என்றார் குடியானவர்.

"சரி, அப்படியே செய்கிறேன்" என்றான் அந்த இளைஞன். அன்று பகல் அவன் சத்திரத்திலேயே மற்றவர்களோடு சாப்பிட்டான். தனிச் சாப்பாடு தேடிப் பிராமணர் வீட்டுக்குப் போகவில்லை. புத்த பெருமான் கொள்கைகளில் அவனுக்குப் பற்று ஏற்பட்டிருந்தது. மாலையில் திரும்பவும் ராஜகிரிக்குப் புறப்பட்டுச் சென்றான்.

மறுபடியும் ஓராண்டு கழிந்தது. சித்திரை மாதத்து முதல் வெள்ளிக்கிழமை சத்திரத்துத் திண்ணையில் அந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அசோகர்_கதைகள்.pdf/37&oldid=734159" இலிருந்து மீள்விக்கப்பட்டது