பக்கம்:அசோகர் கதைகள்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதை இரண்டு

37

முதலில் கூட்டிச் செல்ல வேண்டாம். வீட்டில் நீங்கள் இடம் பெற்ற பிறகு, உங்கள் அண்ணனிடம் மட்டுமல்லாமல் அண்ணியிடமும் மரியாதையாக நடந்துகொள்ளுங்கள்" என்று சோதனையின் விவரத்தைக் கூறினர் குடியானவர்.

வழக்கம்போல் அடுத்த ஆண்டு சித்திரைமாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று தம்மை வந்து சந்திக்கும்படி அவர் சொல்லத் தவறவில்லை.

ஒராண்டுக்குப் பிறகு இளைஞன் அவரைச் சத்திரத்தில் சந்தித்தான்.

"அசோகர் வாக்கு அமுத வாக்கு! ஐயா, இப்போது எங்கள் அண்ணன் தானகவே எங்களுக்குப் பல வசதிகள் செய்து கொடுத்திருக்கிறான் வாணிபத்தில் வரும் லாபத்தை எங்கள் ஒவ்வொருவர் பெயருக்கும் நிலம் வாங்கக் கூடப் பயன் படுத்தியிருக்கிறான்” என்று மகாலிங்க சாஸ்திரி மகிழ்ச்சியோடு கூறினான்.

"தம்பீ. இந்த மாறுதலுக்குக் காரணம் என்னவென்று நினைக்கிறாய்?"

"அம்மா அதிகம் செல்லம் கொடுத்ததால் அவன் தான்தோன்றியாக வளர்ந்தான். அப்பாவின் அளவுக்கு மிஞ்சிய திட்டமான கண்டிப்பு அவர்மீது வெறுப்பைத் தூண்டவே அவன் கட்டுப்பாடற்ற தறுதலையாக மாறி விட்டான். நாங்கள் யாவரும் அவனை மதிக்காமல் இருக்கவே அவன் எங்களைப் பகைவராகக் கருதி வீட்டை விட்டுத் துரத்தி விட்டான். இப்போது நாங்கள் எல்லோரும் அவனை மதித்துப் போற்றி நடந்ததைப் பார்த்தும், எங்களுக்குள்ளே நிலவும் அன்பைக் கண்டும் அவனும் மனம் மாறி விட்டான். ஐயா, உங்கள் பேச்சைக் கேட்டதால் எங்கள்