பக்கம்:அசோகர் கதைகள்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதை இரண்டு

39

அவருடைய பணி நம் அரசுக்கு இன்றியமையாதது. அவரை நான் கமது மாவட்ட நீதிபதிகளிலே ஒருவராக நியமிக்கிறேன். இந்த ஆண்டுமுதல் அவர் ஒரு பிரதேச மகாமந்திரராகப் பதவி ஏற்று நமது அரசுக்குப் பணிபுரிய ஆணையிடுகிறேன்" என்று கூறினார்.

அவருடைய குரலும் தோற்றமும் அவர் யார் என்பதை இளைஞனுக்குத் தெளிவாக்கிவிட்டன. குடியானவர் உருவத்தில் வந்து தன்னைக் கவர்ந்துகொண்ட பெருமான் அவர்தாம் என்று அறிந்து மகாலிங்க சாஸ்திரி ஆனந்த வெள்ளத்தில் மிதந்தான்.