பக்கம்:அசோகர் கதைகள்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

அசோகர் கதைகள்

னான். அது தன்மீது பாய்ந்தபோது சட்டென்று விலகிக் கொண்டான். பாய்ந்த வேகத்தில் அது படீரென்று தரையில் விழுந்தது. அது திரும்ப எழுவதற்குள் ஈசுவரநாதன் அதன் முதுகின் மேல் பாய்ந்து விலாவில் தன் வாளைப் பாய்ச்சி விட்டான். மிகுந்த ஆரவாரத்தோடு சிங்கம் இளவரசன் பக்கமாகத் திரும்பியது. அதன் விலாவில் பாய்ந்த வாளை உருவிச் சுழற்றிச் சுழற்றி அதன் முகத்தில் பல காயங்களை உண்டாக்கினான் இளவரசன். கடைசியில் சிங்கம் வாயைப் பிளந்து கொண்டு அவனைக் கடித்துக் குதறிவிட முன் வந்தது. தன் வாளை அதன் தொண்டைக் குழிக்குள் பாய்ச்சிக் கொன்று விட்டான் ஈசுவர நாதன்.

தோழர்கள் ஆரவார முழக்கங்கள் எழுப்பிக் கொண்டு ஈசுவர காதனைச் சூழ்ந்து கொண்டார்கள். தனியொருவனாக நின்று சிங்கத்துடன் நேருக்கு நேர் போராடி அதைக் கொன்றொழித்த அவன் வீரத்தைப் பலபடப் பாராட்டினர்கள். இரண்டு வீரர்கள் அந்தச் சிங்கத்தை ஒரு மரக் கொம்பிலே தொங்கவிட்டுத் தங்கள் தோள்களிலே அந்த மரக்கொம்பைத் தாங்கிக் கொண்டார்கள். வெற்றிக் களிப்போடு அவர்கள் நகர் நோக்கித் திரும்பினார்கள்.

திரும்பும் வழியில், அவர்கள் வரும் ஓசை கேட்டுப் புதருக்குள்ளே ஒளிந்திருத்த மான் ஒன்று தப்பி ஓடுவதற்காக வெளிப்பட்டுப் பாய்ந்தோடியது.

"இளவரசே, தங்கள் வெற்றி விருந்துக்கு இந்த மான் பயன்படுமே" என்று தோழன் ஒருவன் கூறினான்.

அவன் கூறி முடிப்பதற்கு முன்னால் மான் அம்புபட்டு வீழ்ந்தது. ஈசுவரனாதன் அவ்வளவு விரைவாக நாணேற்