பக்கம்:அசோகர் கதைகள்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் பரிசீலிக்கப்பட்டது.
கதை மூன்று
45
 

றிக் குறி பார்த்து அம்பெய்து ஒடும் மானைச் சாய்த்து விட்டான். அந்த மானையும் தோழர்கள் தூக்கிக் கொண் டார்கள். வழி முழுவதும் தோழர்கள் இளவரசனைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே நடந்தார்கள்.

நகருக்குள் அவர்கள் நுழைந்தபோது, அவர்களைச் சுற்றி ஒரு சிறு கூட்டமே கூடிவிட்டது. சிங்கத்தைக் கண்டு வியப்போரும், சிங்கத்தைக் கொன்ற இளவரசனுடைய வீரத்தைப் பாராட்டுவோரும், அவர்கள் ஊர்வலத்தை வேடிக்கை பார்ப்போருமாகக் கூட்டம் கூடி விட்டது. அந்தக் கூட்டத்தினர் இளவரசன் குழுவினரை அரண்மனை வாயில் வரையில் தொடர்ந்து சென்றனர். பின்பு கலந்து சென்று விட்டனர்.

இளவரசன் ஈசுவரகாதன் வெற்றிக் களிப்போடு அரண்மனையினுள் நுழைந்தான். வந்து சேர்ந்த சிறிது நேரத்திற்குள் அங்கு தான் வருமுன்னரே விருந்து ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிந்து வியப்படைந்தான்.

இந்தத் திடீர் விருந்து யாருக்காக என்று அறிய அவன் மனம் அவாக் கொண்டது.

அதற்குள் அவன் தந்தையே எதிர்ப்பட்டு அவன் கேள்விக்கு விடையளித்து விட்டார்.

மாமன்னர் அசோகர் காசிக்கு வருகிறாராம். புத்த சங்க கிர்மாணத்திற்காக வரும் அவர் ஒரு வேளை அரண்மனையில் விருந்துண்ண ஒப்புக் கொண்டிருக்கிறாராம். அவருக்காகத்தான் விருந்து ஏற்பாடுகள் நடைபெறுகின்றனவாம்.