பக்கம்:அசோகர் கதைகள்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

அசோகர் கதைகள்

மாமன்னர் அசோகரை ஈசுவரநாதன் அதற்குமுன் நேரில் பார்த்தது கிடையாது. அன்று அவரை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற மனக்கிளர்ச்சி ஒரு புறம். அவருக்கு விருந்து வைப்பதற்காகத் தனக்கு அந்த மான் சிக்கியதோ என்ற எண்ணம் ஒருபுறம். இப்படிப் பல திறப்பட்ட எண்ணங்களோடு உலவினால் ஈசுவரகாதன்.

மாமன்னர் அசோகரைப் பற்றி அவள் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறான். அவனுடைய தந்தையே அவருடைய சிறந்த குணங்களைப் போற்றிப் பலமுறை பேசக் கேட்டிருக்கிறான்.

யாரும் எப்போதும் அசோகரைப் பற்றிக் குறைவாகப் பேசியதே கிடையாது. உலக முழுவதும் போற்றும் அவருடைய பெருமைகளைக் கேட்டுக் கேட்டு, தானும் அவரைப்போல் பெருமைக்காளாக வேண்டுமென்ற ஓர் ஆசை அவன் உள்ளத்தின் அடியிலே ஊறியது. எல்லாவற்றுக்கும் முதலாக அவன் தன் காட்டை அசோகரின் ஆட்சியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தான். தன் ஆட்சியில் நாடு வரும்போது, நிச்சயமாக அடிமைத் தளையை உடைத்தெறிந்து சுதந்திர ஆட்சியை நிலைநாட்ட வேண்டுமென்று அவன் வீர உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது. தன் காட்டை அடிமைப்படுத்தி யிருப்பவர் என்ற முறையில் அவனுக்கு அசோகர் மீது ஒரளவு வெறுப்பு இருந்தபோதிலும், அவருடைய புகழைக் கேட்டு கேட்டு அவரைத் தன் இலட்சிய நாயகராக அவன் ஏற்றுக் கொண்டிருந்தான். அந்த இலட்சிய நாயகரைக் காணப்