பக்கம்:அசோகர் கதைகள்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

அசோகர் கதைகள்

முடியும் கனிந்த அருட்பார்வையும், கம்பீரம் சற்றும் குறையாத திருமுகமும் படைத்த மாமன்னர் அசோகர் நடந்து வந்த காட்சி, நூறு நிலவுகளின் இடையே ஒரு பகலவன் தோன்றி ஒளி வீசிக்கொண்டு நகர்ந்து வருவது போன்றிருந்தது.

ஒரு மாமன்னரை வரவேற்க ஒரு சிற்றசரர் முறையாக என்னென்ன ஏற்பாடுகள் செய்யவேண்டுமோ அத்தனை ஏற்பாடுகளும் குறைவறச் செய்திருந்தார் காசி மன்னர். வேலையாட்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற, சுழன்று சுழன்று ஓடி ஒடிப் பணிபுரிந்தனர்.

வரவேற்பு மண்டபத்திலே எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். காசி மன்னரோடு அரசியல் பற்றிச் சிறிது நேரம் அசோகர் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் பார்வை இளவரசன் ஈசுவரநாதன் மீது பதிந்தது.

"தங்கன் மைந்தன்தானே?" என்று அசோகர் கேட்டதற்கு ஒரு புன்னகையைப் பதிலாக அளித்துப் பேசாமலிருந்தார் காசி மன்னர்.

"ஈசுவரநாதா, உன் வீர சாகசத்தைப் பற்றிக் கேள்விப் பட்டேன். சிங்கத்தை வெல்லும் ஒரு சிங்கத்தைத் தன் மகனாகப் பெற்ற காசி மன்னர் பெரும் பாக்கியசாலிதான்!” என்று மாமன்னர் கூறினர்.

ஈசுவரகாதனின் உள்ளம் முழுவதும் இந்தப் பாராட்டுரையால் மகிழ்ச்சி வெள்ளம் நிறைந்து வழிந்தது. அவனி முழுவதும் வளைத்தாளும் ஒரு மாமன்னர்-உலகம் போற்றும் ஒரு பெரிய சீல நாயகர் தன்னை நேரில் நின்று போற்றிப் புகழ்ந்து பேசுகிறார் என்னும்போது