பக்கம்:அசோகர் கதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

அசோகர் கதைகள்

பிடிக்கவேண்டும் என்பது விதியாகத்தான் நெடுநாள் இருந்துவந்தது.

இடையிலே யாரோ கதை கட்டி விட்டிருந்தார்கள்.

புத்த பெருமான ஒரு பேதை போய்க் கண்டானாம். அவனுக்குப் புத்த பெருமான் உயிர்களைக் கொல்லக் கூடாது என்று போதனை புரிந்தாராம். அந்தப் பேதை உணவுக்காகக் கொல்லக் கூடாதா என்று கேட்டானாம். உணவுக்காகவும் கொல்லக் கூடாது என்று அழுத்தக் திருத்தமாகப் பதிலளித்தாராம் பெருமான். மேலும் ஒரு சந்தேகம் என்று கேட்டானம் பேதை. என்ன? என்று கேட்டிருக்கிறார் புத்த பெருமான்.

"தானாகச் செத்துப்போன உயிர்களின் உடலைத் தின்னலாமா?' என்று அவன் கேட்டானாம்.

"அதை வேண்டுமானல் தின்னலாம், கொல்லுவது பாபம். செத்துக் கிடப்பதைத் தின்பது பாவமில்லை" என்று புத்த பெருமான் கூறினராம்.

இந்தக் கதையைக் கட்டிவிட்டவர்களின் நோக்கம் நிறைவேறிற்று.

கொல்லுவது பாவம்; புலால் தின்னுவது பாவமில்லை என்ற போலிக் கொள்கை புத்த பெருமானின் விளக்கம் என்ற பெயரிலே நாடெங்கும் பரவிவிட்டது. நாளா வட்டத்தில் செத்ததைத் தின்னலாம் என்ற கொள்கை போய்த் தான் கொல்லாத எதையும் தின்னலாம் என்ற கருத்து எங்கும் பரவிவிட்டது. கொல்லுவதற்கென்றும் கொன்ற பாபத்தை ஏற்றுக் கொள்ளுவதற்கென்றும் ஒரு வகுப்பினர் தோன்றினர்கள். அவர்கள் பாவத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அசோகர்_கதைகள்.pdf/52&oldid=734176" இலிருந்து மீள்விக்கப்பட்டது