பக்கம்:அசோகர் கதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதை மூன்று

51

பற்றி அக்கறை கொள்ளாமல், தங்கள் போக போக்கியங்களேயே பெரும் பாக்கியமாகக் கருதிப் புலால் கடைகளைத் திறந்தார்கள். மற்றவர்கள் தின்னுவது பாவமில்லை என்ற கொள்கையில் தாராளமாகப் புலால் தின்னத் தொடங்கினார்கள்.

இந்தக் கொள்கைகள் புத்த சங்கத்தினரிடையேயும் பரவிவிட்டன. புத்த பிட்சுக்களே புலால் தின்னுவது பாவமில்லே என்ற கருத்தை ஏற்று நடக்கத்தொடங்கி விட்டார்கள். எல்லோரும் புத்த பெருமானின் கருத்துக்கு மாறுபாடில்லாமல் தாங்கள் நடப்பதாகக் கருதிக்கொண்டார்கள்.

அசோகர் புத்த சங்கத்தில் ஈடுபாடு கொண்ட பின்னர்தான் புத்த பெருமானின் உண்மையான தத்துவங்கள் மீண்டும் நடைமுறைக்கு வந்தன. புத்த சங்கத்தினர் உயிர்களைக் கொல்லவும் கூடாது; புலால் உண்ணவும் கூடாது என்ற கண்டிப்பான விதி ஏற்பட்டது. அசோகர் தம் வாழ்வில் இந்த ஏற்பாட்டை உண்மையோடு அனுசரித்து வந்தார். மேலும் அவர் கலிங்கப் போரில் மனமாறுதலடைந்தபின் புத்த தருமக் கொள்கையில் கருத்துான்றி அவற்றைத் தம் வாழ்வில் அனுசரித்து வந்தார். புத்த தருமங்களை வாழ்வில் கைக்கொள்ளக் கொள்ள, அவருக்கு ஒரு விதமான மனச்சாந்தியும் இன்பமும் ஏற்பட்டு வந்தன.

அசோகர் புலால் உண்பதில்லை என்பதை அவருடைய ஆட்களின் மூலம் அறிந்துகொண்ட காசி மன்னர், தம் பரிசாரகர்களுக்குச் சொல்லி-புலாலுணவு வகைகளை அடியோடு நிறுத்திவிடச் செய்தார். விருந்தில் புலாலைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அசோகர்_கதைகள்.pdf/53&oldid=734177" இலிருந்து மீள்விக்கப்பட்டது