பக்கம்:அசோகர் கதைகள்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

அசோகர் கதைகள்

படைத்து அசோகரின் மனம் புண்படாமல் செய்துவிட்டோம் என்ற மன அமைதியுடன் அவர் இருந்தார்.

சிங்கத்தைத் தான் எதிர்த்து நின்று போராடியதை வலிய வந்து பாராட்டிய மாமன்னர், மான் கறியின் சுவையையும் பாராட்டிப் பேசுவார் என்று ஈசுவரகாதனின் உள்ளம் எதிர்பார்த்தது. ஆனால் மான் கறியே படைக்கப் பெறவில்லை என்பதை அறிந்தபோது அந்த இள உள்ளம் ஏமாற்ற மடைந்தது. பின்னால் காரணத்தை அறிந்த போது, ஈசுவரநாதன் புத்த சங்கத்தைப் பற்றியே அலட்சிய எண்ணம் கொள்ளத் தொடங்கிவிட்டான். உண்ணும் உணவிலெல்லாம் பாகுபாடுகள் செய்வது மூட நம்பிக்கைகளின் வகையைச் சார்ந்தது என்று அவன் கருதலானான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொன்றில் விருப்பிருக்கும்; ஒவ்வொன்றில் வெறுப்பிருக்கும். உணவு, மரக்கறி என்றும் புலால் என்றும் இருவகைப் பட்டது. இதில் மனம் விரும்பியதை அவனவன் உண்ண வேண்டுமே யொழிய இன்னதுதான் உண்ண வேண்டும் என்று சட்டம் வகுப்பது தகாது என்று அவன் கருதினான்.

மக்களை நல்வழிப்படுத்துவதற்கென்று சமயங்களை வகுக்கின்ற பெரியார்கள் இப்படிச் சில மூட நம்பிக்கைகளையும் புகுத்திவிடுகிறர்களே என்று அவன் எண்ணினான். அசோகர் போன்ற பேராற்றல் வாய்ந்த மாமன்னர்கள் இது போன்ற கொள்கைகளைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுகிறார்களே என்று அவன் சலித்துக் கொண்டான். வாய்ப்புக் கிடைத்தால் மாமன்னருடன் பேசி அவருடைய இந்தக் குருட்டுக் கொள்கையை நீக்க வேண்டும் என்றும் உறுதிகொண்டான்.