கதை மூன்று
55
ருக்கு இந்த வேலை எளிதாக இருந்திருக்காது. அவன் அசோகரைத் தன் இலட்சிய நாயகராகவும் கொண்டிருந்ததால் அது மிகவும் எளிதாக நிறைவேற வசதியாயிற்று.
அந்த நிகழ்ச்சி இப்படித்தான் கடந்தது.
ஒரு நாள் காசி மன்னருக்கு மாமன்னரிடமிருந்து ஒரு திருமுகம் வந்தது. தம் அமைச்சர்களில் ஒருவர் முதுமையுற்று ஓய்வு பெற்றுவிட்டபடியால், அந்த வேலைகளை அசோகரே மேற்கொள்ள வேண்டியிருந்தது. வேறு ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்தும்வரையில் மாமன்னர் தாமே அதைக் கவனிக்க வேண்டியிருந்தது. தமக்குத் துணையாக இளவரசன் ஈகவரநாதனைச் சில நாட்கள் அனுப்பி வைத்தால் நலமாக இருக்கும் என்று மாமன்னர் தம் கைப்பட எழுதியிருந்தார்.
காசி மன்னர் மறுத்துரைக்க எண்ணவேயில்லே. மகனே அழைத்துப் 'புறப்படு’ என்று கட்டளையிட்டுவிட்டார். அசோகர் வேலைக்கு என்று அழைத்திருக்தால் ஈசுவர நாதனின் சுதந்திர உள்ளம் அதை உதறித் தள்ளி யிருக்கும். தமக்குத் துணையாக ஒத்தாசை இருக்கவே அழைக்கிறார் என்ற நினைப்பில் அவன் பெருந்தன்மையோடு தன் தந்தையின் கட்டளைக்குக் கீழ்ப்படித்தான். மறு நாளே பாடலிபுத்திரத்திற்குப் போய்ச் சேர்ந்தான்.
அசோகர் அவனை அன்பும் ஆர்வமும் பொங்கித் ததும்ப வரவேற்றார். அவன் நலத்தையும் அவன் தாய் தந்தையர் நலத்தையும் அக்கறையோடு விசாரித்தார். தன் அழைப்புக்கு இணங்கி உடனே புறப்பட்டு வந்தமைக்காகத் தன் பாராட்டுதல்களைக் கூறினர். பின் அவனிடம் பார்க்க வேண்டிய வேலைகளை ஒப்படைத்தார்.