பக்கம்:அசோகர் கதைகள்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

அசோகர் கதைகள்

ஈசுவர நாதனிடம் ஒப்படைத்த வேலை, சிற்றரசர்களின் நிலையைக் கண்காணிப்பதாகும். அசோகர் தம் பேரரசு சீர் குலையாமல் காப்பற்ற - சிற்றரசர்களைக் கண்காணிப்பதற்காக ஒரு தனித் துறையே உண்டாக்கி, அதற்கு முதிர்ந்த அனுபவம் வாய்ந்த ஓர் அமைச்சரையே நியமித்திருந்தார். அந்தப் பேரறிஞரின் வேலையைத் தான் ஈசுவரகாதன் தொடர்ந்து பார்க்க வேண்டியிருந்தது. நாள் தோறும் மாமன்னர் தாமே முன்வந்து அரை நாழிகைப் பொழுது அவ்வேலையில் ஈடுபடுவார்.

ஈசுவராாதன் வேலையை ஒப்புக்கொண்டு கருத்தூன்றிப் பார்க்கத் தொடங்கினான். அசோகரின் அரசாட்சி முறையையும், இராஜதந்திர வழிகளையும் தானும் கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தோடுதான் ஈசுவராாதன் அந்த வேலையில் அமர்ந்தான். ஆனால் போகப் போக அவனுக்கு அசோகரிடம் இருந்த மதிப்பு அதிகரித்தது. அவர் மீது அன்பும் தோன்றி வளர்ந்தது.

பொதுவாகத் தலைவர்களாக விளங்குவோரிடம் தூரத்திலிருந்து பழகுவதே சிறப்பு. அவர்களைப் பற்றி நாம் கொண்டிருக்கும் உய்ர்ந்த மதிப்பும் கருத்தும் நெருங்கிப் பழகப் பழகக் குறைந்துவிடும். சில தலைவர்களிடம் நெருங்கிப் பழகப் பழக, ஏன் இந்த மனிதரிடம் பழகினோம் என்ற வெறுப்பும் ஏற்பட்டு விடும். பெரும்பாலான தலைவர்கள் நிலை இப்படித்தான். ஆனால் அசோகர் நிலை இப்படிப் பட்டதல்ல, நெருங்கிப் பழகப் பழக, அவர் மீது நமக்கு அன்பே உண்டாகும். அவருடைய கொள்கைளில் ஆழ்ந்த பற்றே உண்டாகும். அதற்குக் காரணம், அவருடைய உண்மையான செயலும், உயர்ந்த ஒழுக்கமும் சிறந்த மனப் பண்புமேயாகும்.