பக்கம்:அசோகர் கதைகள்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

அசோகர் கதைகள்

மறுத்து விட்டான். மறுநாளே அச்செய்தி கிடைத்து விட்டது.

"ஈசுவரநாதா, நாளை நான் அந்தச் சிற்றரசனைச் சந்திக்கப் போகிறேன். நீயும் வருகிறாயா!" என்று கேட்டார் அசோகர்.

'வருகிறேன்!" என்றான் ஈசுவரநாதன்.

இருவரும் தங்கள் அரச உடைகளைக் களைந்து மூட்டை கட்டிக் கொண்டார்கள். ஆட்டிடையர்களைப் போல வேடம் கொண்டு, சிற்றரசனின் கோட்டைக்குள்ளே நுழைந்தார்கள். பால்காரர் போல் நடித்து அரண்மனை அந்தப்புரத்தை அடைந்து விட்டார்கள். அங்கே ஒரு மறைவான இடத்திலே நின்று தங்கள் அரச உடைகளை அணிந்து கொண்டார்கள்.

பகையரசனின் அரண்மனை. அரச உடையில் மாமன்னர். பின்னால் இளவரசன். அசோகர் சற்றும் கலங்கவில்லை. அவர் உடன் செல்லும் தைரியத்தோடு ஈசுவரகாதன் இருந்தான்.

கம்பீரமாக நடந்து சென்றார் அசோகர். சிற்றரசன் மந்திராலோசனை மண்டபத்தை அடைந்தார். திடீரென்று மாமன்னரை நேரில் கண்ட அதிர்ச்சி காவலர்களைப் பிரமிக்க வைத்தது. வாளை உயர்த்தி வணக்கம் கூறினர். "அசோகர் வந்திருக்கிறார் என்று உங்கள் அரசனிடம் போய்ச் சொல்" என்று கூறினர் அசோகர். ஒரு காவலன் ஒடினான். அசோகர் ஈசுவரநாதன் பின் தொடர நடந்தார்.

அந்தச் சிற்றரசன் ஓடோடி வந்து வணங்கி வரவேற்றான், இருவருக்கும் உயர்ந்த இருக்கை தந்து