பக்கம்:அசோகர் கதைகள்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

அசோகர் கதைகள்

அந்தச் சிற்றரசனுக்கு மனமாற்றம் ஏற்பட்ட பொழுதிலேயே ஈசுவரனாதனுக்கும் மனமாற்றம் ஏற்பட்டு விட்டது.

அசோக மாமன்னரின் பேரரசை நிலை நிறுத்துவதற்குத் தானும் தொடர்ந்துழைக்க வேண்டுமென்று அவன் தன் மனத்திற்குள்ளேயே முடிவு செய்துகொண்டான்.

கோட்டையிலிருந்து அசோகர் வெளியேறிய போது அவர் அடிநிழலை மட்டுமன்றி அவர் வழி முழுவதையும் பின்பற்றும் ஒரு மனநிலை பெற்று ஈசுவரநாதன் அவரைப் பின்தொடர்ந்து நடந்தான்.