பக்கம்:அசோகர் கதைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அசோகர் கதைகள்
கதை ஒன்று




துன்பம் போக்கும் அன்பர்

மாமன்னர் அசோகர் ஆட்சி நடந்துகொண்டிருந்த காலம் அது. அசோகர் இனிமேல் போரே நடத்துவதில்லை என்று உறுதி எடுத்துக்கொண்டிருந்தார். போரினால் மக்கள் அடையும் துன்பங்களை நேரில் கண்டறிந்து மனம் மாறிய பின் அவர் இவ்வாறு உறுதி செய்துகொண்டார். இந்தச் செய்தி பரத கண்டம் முழுவதும் பரவியது.

ஒரு சிற்றுாரிலே இருந்த பெரியவர்கள் ஒருநாள் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"துன்பம் அடைந்தவர்களைக் கண்டால் அரசர் அப்படியே கண்ணிர் விட்டுவிடுகிறாராம்! யாராவது ஏதாவது கவலை என்று சொன்னல் அதை உடனே தீர்ப்பதற்கு வழி செய்கிறாராம்!அரசர் அடியோடு மாறிவிட்டார்" என்றார் ஒரு பெரியார்.

"உண்மைதான். மற்ற உயிர்களைத் தம் உயிர்போல் மதிக்கும் மனப்பான்மை ஒருவருக்கு வந்துவிட்டால், அவர் எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கவே பாடுபடுவார். புத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அசோகர்_கதைகள்.pdf/7&oldid=734191" இலிருந்து மீள்விக்கப்பட்டது