பக்கம்:அசோகர் கதைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

அசோகர் கதைகள்

பெருமானின் வழியில் திரும்பிய அசோக மன்னர், இரக்கம் கொண்டவராக மாறியதில் வியப்பில்லை” என்றார் அவ்வூர்ப் பள்ளி ஆசிரியர்.

"கவிஞர் ஒருவர் சாப்பாட்டுக்கில்லாமல் பட்டினியாய்க் கிடக்கிறார் என்று யாரோ தெருவில் பேசிக்கொண்டார்களாம். மாறுவேடத்தில் சென்ற மாமன்னர் இதைக் கேள்விப்பட்டு, உடனே உண்மையை அறிந்து, கவிஞர் வீட்டுக்கு வண்டி வண்டியாய்த் தானியங்கள் அனுப்பி வைத்தாராம்!" என்று வெளியூரிலிருந்து வந்த ஒரு வணிகர் கூறினார்.

இப்படியே மாமன்னர் அசோகரைப் பற்றித் தாங்கள் கேள்விப்பட்டவற்றையும் அறிந்தவற்றையும் கூறிப் புகழ்ந்து பொழுது போக்கிக்கொண்டிருந்தார்கள் அந்த ஊர்ப் பெரியவர்கள். அவர்கள் பேசியவற்றையெல்லாம் ஓர் இளைஞன் கவனித்துக்கொண்டிருந்தான்.

அந்த இளைஞனுடைய தந்தை ஒரு போர் வீரன். அந்தப் போர் வீரன், இளைஞன் சிறு பிள்ளையாய் இருந்த போதே ஒரு போரில் நெஞ்சில் அம்பு பாய்ந்து இறந்து போனான். அந்த இளைஞனை அவனுடைய தாய் தான் வளர்த்துவந்தாள். அவள் எப்படியோ பாடுபட்டு அவனைக் கவலையில்லாமல் வளர்த்துவந்தாள். ஒரே பிள்ளையாகையால் அவள் அவனை அடக்கி வளர்க்கவில்லை.

அந்த இளைஞன் சிறு வயதில் ஒழுங்காகப் பள்ளிக்குப் போகவில்லை. வீட்டில் சாப்பிட்டுவிட்டு வெளியில் எங்காவது போய்ச் சுற்றிவிட்டு வருவான். அவன் வளர்ந்த பிறகு அவன் தாய் சிலசமயம் அவனைக் கடிந்துகொள்ளுவாள். படிக்கவில்லை என்றாலும் ஏதாவது வேலை பழகிக்கொள்ளக் கூடாதா என்று கேட்பாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அசோகர்_கதைகள்.pdf/8&oldid=734192" இலிருந்து மீள்விக்கப்பட்டது