பக்கம்:அசோகர் கதைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதை ஒன்று

7

ஆனால் அவளுடைய பேச்சையெல்லாம் அவன் உதறித் தள்ளிவிடுவான். தான் உழைத்துப் பெறும் கூலியில் தாய் அரிசியும் காய்கறியும் வாங்கிவந்து அவனுக்கும் சோறு சமைத்துப் போடுவாள். ஒருநாளாவது அவன் வயதான தன் தாயின் உழைப்பில் தின்று தான் சோம்பேறியாய் இருந்துகொண்டிருப்பது தவறு என்று நினைத்துப் பார்த் ததே யில்லை.

கடைசியில் ஒருநாள் காய்ச்சல் என்று சொல்லிக் கொண்டு அவனுடைய தாய் படுத்துவிட்டாள். அவள் நோயாகப் படுத்துவிட்டபின், வீட்டுச் செலவுக்குக் காசே கிடைக்கவில்லை. தான் போய் வேலை பார்க்க வேண்டும் என்று அந்த இளைஞன் நினைக்கவேயில்லை. எங்கோ சுற்றி விட்டு வந்து "அம்மா எனக்குச் சோறு போடு!" என்றான். அவளோ, படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாமல் கிடந்தாள்.

தன் தாய் முடியாமல் இருக்கிறாள் என்பதையே சிறிதும் கருதிப் பாராமல், "அம்மா, வயிறு பசிக்கிறது. எழுந்துவந்து சோறு போடு” என்று கேட்டான்.

அவள் அவனே அருகில் வரும்படி அழைத்தாள்.

"மகனே, எங்காவது போய் வேலை செய்து நாலு காசு கூலி வாங்கிக் கொண்டு வா. நான் அரிசி வாங்கிச் சோறு சமைத்துப் போடுகிறேன்" என்றாள்.

"நான் வேலை செய்வதா? எனக்கு ஒரு வேலையும் செய்யத் தெரியாதே!" என்று சொல்லிவிட்டு அந்த இளைஞன் பேசாமல் படுத்துவிட்டான்.

இரண்டு மூன்று நாட்களாக அவனும் பட்டினி; அவன் அம்மாவும் பட்டினி; மருந்து வாங்கிக் கொடுக்காத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அசோகர்_கதைகள்.pdf/9&oldid=734193" இலிருந்து மீள்விக்கப்பட்டது