பக்கம்:அஞ்சலி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜமதக்னி 91

“அதென்ன மேல்படிப்போ? உங்களுக்குத்தான் ப்ரீதி.”

“ஏன் இப்படி அலுத்துக்கொள்கிறாய் மாஞ்சி? எல்லோருக்கும் அவரவர் நிறைவு பெறக்கூடிய துறையில் வேண்டிய சந்தர்ப்பங்களும் செளகரியங்களும் கிடைக்கின்றனவோ? கிடைக்கும்போது பயனடையாவிடில் பிறகு பிறவியால் என்னதான் பயன்? உன் பிள்ளை இன்னும் புகழுடன் திரும்பி வருகையில் உனக்கு வேண்டியிருக்காதா?”

“என் பிள்ளை எனக்கு என்றைக்கும் ஒண்ணுதான். அன்றைக்குக் கல்சட்டியில் தயிரையும் பழையதையும் ஒட ஒடப் பிசைந்து, ‘அடிக்குழம்பு ஆனை போலே’ என்று சொல்லிப் போட்ட நாளிலிருந்து, இன்னிக்குக் கோட்டையும் சூட்டையும் அவசரமாய் மாட்டிண்டு, கீழே உட்கார முடியாமல், மேஜையிலே என்னிக்காவது சாப்பிட நேர்ந்தால்—நீங்கள் கரிச்சாலும் சரி அந்த நாளும் ஒண்ணுதான். என் மகன் என்றும் ஒண்ணுதான் எனக்குத் தெரியும். எனக்கு வேறேதும் தெரியவும் வேண்டாம்.”

“ஓ!”

“அத்தோடு நீங்கள் சொல்ற நாளுக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கோ? இன்னிக் கதையைச் சொல்லுங்கோ. வீடெல்லாம் எவ்வளவு வெறிச்சுனிருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா? வீட்டின் வெறிச்சை மாற்ற எந்தக் குழந்தை ஒடி விளையாடிண்டிருக்கு?”

“ஏன், பெற்றுப் பெற்று பெற்ற வயிறு இன்னும் அலுக்கவில்லையா?”

“நீங்கள் அவரவர்க்கு அவரவர் நிறைவு என்று சொல்கிறீர்களே, எங்களுக்கு எங்கள் தாய்மையில்தான் நிறைவு. ஒரொரு சமயத்தில் பானுவின் நினைப்பு வந்துவிட்டால், அவன் நின்ன இடத்தையும், சுவத்திலே சாய்ஞ்ச இடத்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/101&oldid=1024541" இலிருந்து மீள்விக்கப்பட்டது