பக்கம்:அஞ்சலி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜமதக்னி 97

எனக்கு வாயைக் கட்டிவிட்டது. ஆனால் பயம் என்று பெரிதாய் ஏற்படவில்லை. எனக்கு எப்படி அந்த எண்ணமும், அந்தத் துணிச்சலும் வந்ததோ தெரியவில்லை. என் வயதுக்கு அது இயற்கைகூட இல்லை. சட்டென அதைத் தொண்டையைப் பிடித்து நெருப்புக் குழியில் போட்டுவிட்டேன். அது துடித்துத் துடித்து உடலைப் பின்னிப் பின்னி உயிரோடு சாவதை நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கு அதுவே ஒரு விளையாட்டாயிருந்தது

நாளடைவில் மறைந்துவிட்டது அந்த சம்பவம். இன்று, இப்பொழுதுதான் நினைவு வருகிறது.”

மாஞ்சி வெடிப்பாய்ச் சிரித்தாள்.

“என் பிள்ளை சாவதற்கு நீங்கள்தான் காரணம். நீங்கள்தான் எமன். உங்கள் எண்ணத்தில் நீங்கள்தான் தெய்வம் இல்லையா? உங்கள் குழந்தைகள் உங்கள் இஷ்டப்படி நீங்கள் பிசைந்து பிடித்துவைக்கும் மண் இல்லையா? நெருப்பாய் நின்று நெருப்புக்கே கொடுத்தாச்சு...”

“இல்லை... இல்லை... இல்லை!!!”

ஜமதக்னி துடித்தான். அவளைப் பிச்சை கேட்பது போல், அவன் இரு கைகளும் ஏந்தின.

“என்ன இல்லை?”

“மாஞ்சி!”

இரத்தம் மண்டையில் வேகமாய்ப் பாய்ந்தது. தலை சுழன்று அப்படியே கீழே சாய்ந்துவிட்டான்.

அ.—7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/107&oldid=1033441" இலிருந்து மீள்விக்கப்பட்டது