பக்கம்:அஞ்சலி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பூ ர ணி

வெளியே தென்னை அசைந்தாடிற்று. சலசலக்கும் மட்டைகளினிடையே பதுங்கிய இளநீர் முடிச்சை நோக்கிக்கொண்டிருந்த பூரணி ஒரு முடிவுக்கு வந்தவள் போலும் பெருமூச்செறிந்து, அப்பொழுதுதான் அறைவாசல் வழி சென்ற தன் பேரனைக் கையைச் சொடுக்கி அழைத்தாள்.

“என்ன ஆத்தே” என்று இழுத்துக்கொண்டே பையன் உள்ளே வந்தான். அவனுக்குக் கன அவசரம். பம்பரத்தில் கயிற்றைச் சுற்றிக்கொண்டிருந்தான். பூரணி மெளனமாய்ச் சற்றுநேரம் சிந்தித்துவிட்டு, “உன் அப்பனை நான் வரச்சொன்னேன்னு சொல்லிட்டுப் போ. உன் அம்மாவை உன் மூக்கைக் கழுவி எண்ணெய் தடவச் சொன்னேன்னு சொல்லு, சளி ஒழுவி மூக்கு வெந்து போவுதே!”

“ஆவட்டும், ஆவட்டும்.”

பையன் பொறுமையில்லாது தலையை ஆட்டிக் கொண்டு மூக்கை உறிஞ்சினபடி கீழே விழுந்தடித்து ஓடினான்.

சற்றுநேரந்திற்கெலாம் அவள் மூத்தபிள்ளை மாடியேறி உள்ளே வந்தான்?

“என்னாம்மா?—”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/109&oldid=1033443" இலிருந்து மீள்விக்கப்பட்டது