பக்கம்:அஞ்சலி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூரணி 105

அவன் உள்நாக்குத் தெரிய வாய்விட்டு உரக்கச் சிரித்தான்.

“மாலையிலே மாந்தோப்பிலே ஞானமணிசாமி சமாதிக்கு விளக்கு வைக்கப்போனால், போன இடத்துலே அப்படியே திரும்பி வராமே கலந்துட்டியா. இல்லையே? அடுப்பிலே குளம்பு தளைக்குதுன்னு குடுகுடுன்னு ஒடியே வந்துடல்லே? காலையிலே மேச்சலுக்குப் போற உங்க பசு வீட்டுக்குத் திரும்பாமலே, தன்னை மறந்துட்டுப் புல்லை மேஞ்சுகிட்டு நின்னுடுதா? நின்னா நீதான் சும்மா விட்டுடுவையா?”

“ஐயோ ஏண்டாப்பா ஆசை?”

அதைப் பவுண்டுலே அடைச்சாலும், உன் மூக்குத் திருவாணியை வெச்சாவது மீட்டு வந்துடமாட்டே?”

“கண்டிப்பா, யாரைக் கேட்டு!”

“அதனாலே போறது என்கறது ஏது? என்னா ஆத்தா, எல்லாந் தெரிஞ்ச நீயே இப்படிச் சொல்லிட்டா எல்லாம் நீங்க பதியம் போடறமாதிரி, நாத்து நடறமாதிரி தான். எல்லாம் சுத்திச் சுத்தி இங்கேதான்.”

“நான் என்னத்தைத் தெரிஞ்சவ?”

“அப்படிச் சொல்லாதே, ஆத்தா; தெரியாதவங்களுக்குத் தெரிஞ்ச அளவு, தெரிஞ்சவங்களுக்குத் தெரியாது. ஒண்ணு வச்சுக்க... இந்தப் பூமிலே...” அவன் குனிந்து தரையைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டான். “இந்தப் பூமிலே இருக்கிறதுதான் உண்டு, போவறதே கிடையாது. வானத்துலே பறந்தாலும் பாதம் இங்கேதான் பதிஞ்சாவணும். நான் இங்கேயேதான் இருக்கறேன். நீ கல்லாட்டம் வீட்டைக் கட்டிக்கிட்டு அதைச் சுத்தி பூவும் காயும் மரமுமா தோட்டத்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/115&oldid=1024971" இலிருந்து மீள்விக்கப்பட்டது