பக்கம்:அஞ்சலி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106. லா. ச. ராமாமிருதம்

போட்டுக்கிட்டுப் போவறத்தைப் பத்திப் பேசினா நீஎனக்குத் தாய் மாதிரி ஆனாலும் நிசமா எரிச்சலாய்த்தான் வருது...”

“நீ என்ன, என்னன்னமோ பேசுறியே இல்லாத்தையும் பொல்லாத்தையும்?”

பூரணிக்குப் புரியாத திகில் பிடித்துக்கொண்டது.

“எங்க வீடு மண்வீடுதான். தோட்டம் எங்கே நட்டு இருக்குது?”

அவன் திடீரென்று கம்பீரத்துடன் நிமிர்ந்து நின்றான். முகத்தில் ஒளி மிதந்தது.

“நான் சொல்றது இந்த வீடு இல்லை...”

“பின்னே எந்த வீடாம்?”

“நீயே காணப்போறே. நான் உன்னை அங்கேதானே அழைச்சுக்கிட்டுப் போவப்போறேன்!”

“தம்பி! நான் உன்னோடே வந்துடறேன். இடக்குப் பண்ணல்லே. ஆனால்...”

“என்ன இழுக்கறே? நீ என்ன சொல்லப்போறேன்னு எனக்குத் தெரியும்.”

“எனக்குச் சொல்லத் தெரியலியே!”

“நீ இருந்த இடம், பொறந்த இடம், வாழ்ந்த இடம் இந்தப் பூமியெல்லாம் ஒரு தடவை சுத்திப் பாக்கணுமில்லியா, நீ அந்த நாளுலே இருந்தமாதிரி, இல்லியா?—”

“ஆமாண்டா மவனே, நீ எப்படிக் கண்டே? எனக்கு என்ன வேணும்னுகூடச் சொல்லத் தெரியலே. நீ எப்படியோ என் வவுத்திலேருந்து பிடுங்கி சொல்றியே? அது முடியுமா இப்போ, அப்போ நடந்ததெல்லாம் நடந்த மாதிரியிப்போ...?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/116&oldid=1033448" இலிருந்து மீள்விக்கப்பட்டது