பக்கம்:அஞ்சலி.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூரணி 107

“ஏன் முடியாது ஆத்தா? அதுவும் இந்த வேளையிலே தான் முடியும். அதுவும் இந்தப் பூமியிலே நடக்காத அதிசயமே கிடையாது. இது என்னா பிரமாதம்! எப்பவும் எல்லாருக்கும் இந்த வேளையிலே நடக்கறதுதானே இது! ஆனால் உன் போலேயே எல்லாருக்கும் இருக்காது அவங்க பாக்கற பழைய பாடம்.”

“ஏன்?”

வந்தவன் சிரித்தான்.

“ஆத்தா, உன் பேரு என்ன தெரியுமா?”

“பூரணி. என் வீட்டுலே பன்னெண்டாவதா பொறந்தேன். என் வீட்டுலே எனக்கு முன்னாலே என் தாய்க்கு வவுத்திலேயும் பூமியிலே விளுந்தும் வளர்ந்தும் சின்னதுமா செத்தது நாலு கணக்குலே சேர்க்கல்லே. எனக்குச் சம்பூர்ணம்னு பேர் வெச்சாங்களாம், அப்புறம் பொறக்கலை.”

“அது உனக்கு உன் வீட்டுலே வெச்ச பேர். ஆனால் தனித்தனியா உன்னை உன் வீட்டுலேயும் வெளிலேயும் உன்னை எப்படி எப்படி கூப்பிடறாங்க? அதுமாதிரி நாங்களும் உனக்கு ஒரு பேரு வெச்சிருப்போமில்ல?”

“நீ சொல்றது சரியா விளங்கல்லே.”

“இப்போ உன் எசமானர் உன்னை என்னன்னு கூப்பிடறாரு?”

“என்னை எங்கே அவரு பேர் சொல்லி அளைக்கறாரு? அவர் இதுவரைக்கும் என்னோடே பேசிட்டது என்ன தட்டுக் கெட்டுப் போயிட்டுது? நானும் இந்த வீடு வந்து பெத்து, இருந்து, இதோ பூடப்போறேன். ஏதாவது வேணும்னா கரடியாட்டம் ஒரு உறுமல். அவ்வளவுதான்; சமயம் பார்த்து அதுலேருந்து நான் கண்டுக்கணும். “அடுக்குலே நீராகாரத்துலே உப்புக்கல்லைப் போட்டுக் கலக்கிக் கொண்டு வா” “கலத்தை எடுத்துவை” குளிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/117&oldid=1024973" இருந்து மீள்விக்கப்பட்டது