பக்கம்:அஞ்சலி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூரணி 109

“இப்போதுதான் கண்ணை மூடிக்கிட்டிருக்கறத்துலே ஓர் ஆளோடே பேசிக்கிட்டு இருந்தேன். அவன் சொன்னான். ரெண்டு பக்கத்துலேயும் றக்கை முளைச்சிருக்குது. நல்லாயிருந்தான். நமக்கு மவனாயிருக்கலாம்.”

முதலியாரின் மெளனங்களுக்கெதிரில், ஒரு படையின் ஆரவாரம்கூட அர்த்தமற்றுப் போய்விடும்.

பூரணி புன்னகை புரிந்தாள்.

“அவன் இன்னொணு சொன்னான். அது இப்போ தான் புரியறாப்போல இருக்குது. ஒர் ஆளுக்கு ஒரு பேரு வெச்சா அந்த ஒரு பேரோடே நிக்கல்லே, ஒவ்வொருத்தர் அந்த ஆளுக்கு ஒவ்வொரு பேரு வெச்சுக்கறாங்க...” அவள் கொஞ்சம் தயங்கினாள். ஆனால் அவள் எசமானர் பதில் பேசுபவர் இல்லை. வீட்டில் வருடந்தோறும் திருமூல நட்சத்திரத்தில் நடக்கும் ஆராதனையில் பருப்புக் குழம்புக்கு அடுப்பின்மேல் வைத்த பெரிய அண்டாவைப் போல், மெளனம் அவள் பேசும் பேச்சுக்கள் அத்தனையையும் அவள் பேசப் பேசத் தன்னுள் வாங்கிக் கொண்டிருந்தது.

“என் ஆத்தா, என்னைச் ‘சம்பூர்ணம் சம்பூர்ணம்’னு அழைக்கும். அப்புறம் அதுவே அதுக்கு நீளமாப் போச்சு. ‘பூரணம், பூரணம்’ பூரணியா மாறிப்போச்சு என் ஆயா என்னைக் ‘கொயக்கட்டே’ன்னு கூப்பிடுவாங்க. நான் பளையதும் கூழும் குடிச்சுட்டு குண்டாயிருப்பேன். கூழு குடிச்சவன் குண்டு; சோறு தின்னவன் சொத்தை.”

முதலியார் முகத்தில் ஒரு முறுவலின் நிழலடித்துப் பயந்து மறைந்தது.

“எங்க அண்ணன் என்னைக் ‘கல்பகம்’னு கூப்பிடும். அவர் ஒரு பசு வெச்சிருந்தாரு. அதுக்குக் கல்பகம்னு பேரு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/119&oldid=1024999" இலிருந்து மீள்விக்கப்பட்டது