பக்கம்:அஞ்சலி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110 லா. ச. ராமாமிருதம்

வெள்ளைப்பசு, கண் மைக்கண். அதே மாதிரி எனக்கும் கண்ணுக்கு அடிப்புறத்துலே பொறப்பிலேயே மைக்கோடு...”

அவளுடைய பழைய நினைவுகளை வாசிக்கையில், பூரணி தான் சொல்ல வந்ததை மறந்துவிட்டாள்.

“அண்ணனுக்கு மாட்டுப் பைத்தியம். கால்வாய்க்கு ஒட்டிக்கிட்டுப் போய்த் தன் கையாலேயே தேய்ச்சுக் குளிப்பாட்டும். எனக்கு நல்லா நினைப்பு வருது; ஒருநாள் இடையன் கறக்கறத்துலே அது வாலாலே கண்ணுலே அடிச்சுட்டுதுன்னு, முழங்கையாலே அதை வவுத்திலே இடிச்சான். அவ்வளவுதான்; அண்ண்ன் அதன் கழுத்தை சொரிஞ்சுட்டிருந்தது, அவனை அப்படியே இளத்துப் போட்டு, முதுவுலே குத்திக் கீழே தள்ளி, மேலே காலைப் போட்டு மெறிச்சிருக்குது பாரு, எங்களுக்கெல்லாம் ஒடம்பு வெலவெலத்துப் போச்சு. என் ஆத்தா, அண்ணாத்தைமார் ரேண்டுபேர் கட்டியணைச்சும் மாளல்லே. சோடுத்தவலை பாலும் கீழே கொட்டிப் போச்சு...

“ஹத்து பட்டிமவனே. இந்த வாசல்லே இனி தலை ஆாட்டாதே. பலி போட்டுடுவேன்’னு அண்ணன் கூச்சல் போட்டுது. செத்தேன் புளைச்சேன்னு ஒடியே பூட்டான். எங்களுக்குச் சிரிப்பா வந்தது.”

முதலியார் முகத்தில் நகையரும்பு கட்டிற்று.

“ஓரோருநாள் பவுர்ணமி இரவுலே, முழுநிலா தெருவுலே, தட்டோடுக் கூரைமேலே, ஓலைக் குடிசை மேலே, நடு வாசல்லே பால் ஒழுவற வேளையிலே, நடு நேரத்திலே, அண்ணன் வாசல் திண்ணைலேருந்து எழுந்திருக்கும். மேல்துண்டை உதறி மேலே போட்டுக்கிட்டு, கொட்டாயிலே போய் மாட்டை அவுத்துக்கிட்டுப் புழக்கடைக் கதவைத் திறந்து வயல்காட்டுக்குப் போயிடும். அப்புறம் நிலா சாயற வேளைக்குத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/120&oldid=1025002" இலிருந்து மீள்விக்கப்பட்டது