பக்கம்:அஞ்சலி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112 லா. ச. ராமாமிருதம்

அங்கே கொல்லைப்புறமா ஒரு ஜன்னல். எட்டிப் பிடிச்சுச் கிட்டுப் பார்த்தேன். ஆனால் சரியா விளங்கல்லே, நடுவுலே முருங்கை மரம் மரமாட்டம் நிக்குது.

“ஆத்தா கப்புவை முணுமுறை சுத்திவந்து கீழே விழுந்து கும்பிட்டாங்க. அண்ணன் கீழே குந்தி கப்புவை முதுகைத் தடவிக்கிட்டிருந்தது. கப்பு களுத்தை முறிச்சு அண்ணனையே பாக்குது. ஆளு என்ன நடக்குதுன்னு தெரியல்லே. நான் மெறிக்கிற மெறிலே அடுப்பு இடிஞ்சு நான் தொப்கடீர்னு விளுந்து எளுந்து வாரியடிச்கிக்கிட்டு ஒடினேன். மத்தியானம் சோத்துக்குத்தான் திரும்பி வந்தேன். ஆத்தாகிட்டே சக்கையா உதை தின்னேன். நல்ல வேளையா அண்ணன்வரைக்கும் போவல்லே. அண்ணனுக்கு நேரமில்லே. அண்ணன் கப்புவையும் கன்னுக்குட்டியையும்தான் சுத்திக்கிட்டிருந்தாரு.” .

ஆகாயத்தில் தங்க இலைகளைத் தூவினாற்போல் தென்னையின் பின்னிலிருந்து வெளிப்பட்டு ஒரு பட்சிக் கூட்டம் பளபளத்துக்கொண்டு பறந்து சென்றது.

முதலியார் கழுத்தைக் குனிந்து அதைப் பார்த்தார். அவருக்கு அங்கேதான் நினைவோ, அல்லது வேறெங்கோ? புத்தகத்தில் அடையாளம் வைத்தபடியே கைகள் தொப்பைமேல் கூம்பின.

இந்தத் தென்னைமரம் இருக்குதே—இதுக்குன்னு இந்தப் பூமிலே விதையா தெளிச்ச எந்த மரமா செடியா இருந்தா என்ன?—எல்லாமே அது அதுங்களுக்கு ஏத்தபடி கையையும் காலையும் ஆட்டறாப்பிலே இலையும் மட்டையும் கிளையுமா விரிச்சு போட்டுக்கிட்டு என்னத்தையோ எட்டிப் பிடிக்கிறாப்போலே உயரமா வளருதுங்களே, என்னாத்தை, அப்படி எட்டிப் பாக்குதுங்க? கிளங்கு, வேர்க்கடலை முள்ளங்கி வகையாயிருந்தா கீழுக்கா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/122&oldid=1025009" இலிருந்து மீள்விக்கப்பட்டது