பக்கம்:அஞ்சலி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூரணி 115

கண்ணுக்குப் படுதோ? அப்படித்தான் கனவையும் பிடிச்சுக்கிட்டு நாம் தொங்கறோம். நம்மிலிருந்துதான் கனவு உண்டாவுது, கனவுக் கூட்டைக் கட்டி நடுவுலே குந்தி வாழ்ந்து அகப்பட்ட இரையைத் தின்னு, அறுந்த இடத்தை முடிஞ்சா சரிப்படுத்தி, முடியாட்டா அழிச் சுட்டு, இன்னொண்னு இன்னொரு இடத்துலே, கட்டி, ஒயாமெ ஒழியாமே...

முதலியார் பெருமூச்செறிந்து புத்தகத்தைப் பிரித்தார்.

“ஆமாம்-” பூரணி அலுப்புடன் தலையைத் தலையணையில் முன்னும் பின்னுமாய் ஆட்டினாள்.

“போவற வேளைக்குப் புண்ணியத்துக்குப் படிக்க திருவாசகம் கொண்டு வந்தியாக்கும்!—”

முதலியார் புத்தகத்தை மூடினார். சம்புடம் போல அவர் கைக்குள்ளேயே மறையும் அவ்வளவு சிறிது.

“நான் எந்தத் திருவாசகத்தைக் கண்டேன்? எந்தத் தலத்தைத் தரிசனம் பண்ணினேன், நீயாவது என்னென்னமோ சாஸ்தரம் படிச்சிருக்கே, பாடங்கேட்டிருக்கே, எங்கெங்கோ போனே, மனம் போனபடி யெல்லாம் போய் மனம் திரும்பினப்போ திரும்பி வந்தே—

இந்த வூட்டிலே நான் நுழைஞ்சதிலிருந்து எந்தத்தேரு திருநாளுன்னு என்னைக் கூட்டிப் போயிருக்கே? எனக்கு அதனாலே அலுப்பில்லே; ஆனா நினைப்பில்லியா? ஆனா, வேலை அதிகமாயிருந்தா அதுவுமில்லை.

தேர்!

அடுக்கடுக்காய் மேலேருந்து அடி வரை குலுங்கி அசைஞ்சாடி அசைஞ்சாடி இத்தனைபேர் சேர்ந்து ஒரு பக்கம் இழுத்தா ஒருபக்கம் திரும்பி ‘டிச்’சிலே விழுந்து எழுந்து, ஆடி அசைஞ்சு எந்தத் திருப்பத்திலோ ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/125&oldid=1025259" இலிருந்து மீள்விக்கப்பட்டது