பக்கம்:அஞ்சலி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூரணி 123

மாத்திவந்து பத்து நாளோ என்னவோ ஆவுது. ராவோடு ராவா அந்த அய்யர் வண்டியும் சாமானும் குடும்பமுமா இறங்கி யாரையோ சிபாரிசு கூட்டிக்கிட்டு நம் வீட்டுக் கதவையிடிச்சாரு.

“முதலியாரே, நான் இங்கே வாத்தியாரா வந்திருக்கேன். எதிர் வீடு உங்க வீடு காலின்னு கேள்விப்பட்டேன். தங்கறத்துக்கு இடங் கொடுக்கணும்”னு கேட்டாரு. வீட்டுக்கு விளக்கேத்தி வெக்க வந்தவங்களை வேணாம்னு, தள்ள எந்த நாக்கு எழும்பும் அது என்ன நாக்கு?

“இன்னியாட்டம் அய்யரு தாயார் தாழ்வாரத்துலே குந்திகிட்டு மருமவளை என்னவோ பேசிட்டிருந்தாங்க. மருமவள் தூணிலே சாஞ்சிட்டு கண்ணுலே தண்ணி விட்டிட்டிருந்தது.

“எல்லாத்துக்கும் பூர்வ ஜன்ம புண்ணியம் வேணும். ஆனால் நீயிருக்கிற மாதிரி இருக்கையே அதுக்கு எவ்வளவோ பாபம் பண்ணித்தான் இப்படி நேர்ந்திருக்கு” என்கிறாங்க அந்த அம்மா மருமவளை.

“ஏன் இந்த அம்மா இப்படிப் பேசறாங்கன்னு ஆத்திரமா வந்திருச்சு. இருந்தாலும் நம்ம சமயத்துலே வரல்லே. நழுவப் பார்த்தேன். ஆனா, என் தலையைக் கண்டுட்டாங்க. ‘இங்கே வாடி பொண்னே’ன்னு என்னைச் சாச்சிக்கு இழுத்துட்டாங்க.

“நீயா, யாரு, வீட்டுக்காரிதானே? வா, ஒக்காரு அங்கே பாத்திரத்து மேலே பட்டுக்காதே ”

“என்னம்மா, சின்னம்மா கண்ணாலே சிந்திக்கிட்டு நிக்குது?”

“ஆமா”— பெரியம்மா சலிச்சுக்கிட்டாங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/133&oldid=1033454" இலிருந்து மீள்விக்கப்பட்டது