பக்கம்:அஞ்சலி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூரணி 135

“ஒத்தருக்காக ஒத்தரு செத்துப் போறதுன்னு இருந்தா, செத்தவன் பாடு சொகம், யாருக்குச் செத்தானோ, அவங்க தலையிலே அவன் சுமை. அப்புறம் அப்படி மிஞ்சிப் போனவங்க பாடுதான் கொடுமை.

“ரொம்ப நாளைக்கு நான் கஷ்டப்பட்டேன். ஒரு மாதம் நோவாக்கூடப் படுத்துட்டேன். காவா மேட்டுக் கரையிலே போய் புரியாமே நின்னுட்டு நின்னுட்டு திரும்புவேன். மாரியம்மன் கோயிலுக்குப் போய் வணங்கறப்போ அவனுக்கும் சேர்த்து வணங்குவேன்.

“ஆத்தா அவன் எனக்காகக் கொடுஞ்சாவு செத்துட்டான். அப்படிச் செத்தவங்கல்லாம் இங்கேயே நிம்மதியில்லாமே சுத்துவாங்களாமே. அவனுக்கு நிம்மதியைக் கொடு...”

கிணத்தடிக்குப் போனா, ஜகடையிலே தோண்டியைப் போட்டுட்டு இழுக்க மறந்துட்டு அப்படியே நிப்பேன். இதென்ன நானும் பால் மறந்த கொழந்தை ஆயிட்டேனா? எனக்கு எந்தப் பால் மறந்துபோச்சு? இல்லாட்டி நெனைப்பு வந்திருச்சி?

“பூரணிக்கு என்னமோ புடிச்சுடுத்து”ன்னு ஊரெல்லாம் பேச்சாப் போச்சு, மந்திரக்காரனைக்கூட வரவழைச்சாங்க. அவன் ஏதாவது மந்திரத்துலே மனசைக் கண்டுட்டா என்ன செய்யறதுன்னு திகிலாப் போச்சு. ஆனா, அவன் ஒண்ணும் காணாமலே வேப்பெலையடிச்சுட்டுப் போயிட்டான். இதுக்குன்னு அவருதான் எத்தையும் கண்டுக்கல்லே. என் புருசன், இரும்புத் தலையன், வான்னு சொல்லமாட்டான். போன்னு சொல்லமாட்டான், ஏன்னு கேக்கமாட்டான்.

“ஆனா, நாளாவாவ, எதுதான் நிக்குது? நல்லவேளை அதுதான் இந்தப் பூமியிலே தெம்பு. எப்பவும் வேலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/145&oldid=1025749" இலிருந்து மீள்விக்கப்பட்டது