பக்கம்:அஞ்சலி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூரணி 137

ஞானமணி சாமியார் இந்தக் குகும்பத்துலே மொளைச்சது இன்னிக்கும் இப்பவாட்டம் இருக்குது.

மளுங்க மொட்டையடிச்சு, நெட்டியாட்டம், நெட்டையா. தலைகாணி யுரையாட்டம் காஸாயத் துணி போர்த்து மனுசன் ராசநடை போட்டு அன்னி ராவுலே தெருவழியா வரவனை வாசக் கொறட்டிலிருந்தே பார்த்து, இவரு மேல்துண்டை எடுத்து இடுப்புலெ வரிஞ்சு கட்டி, எதிர்போய் அளைச்சு வந்து, நாங்க ரெண்டுபேரும் அவர் காலிலே விழுந்து சேவிச்சது மறந்து போவுமா?

இதருக்கே சாமியார், சாஸ்திரம் படிச்சவங்க பிரசங்கம் பண்றவங்க இலங்களைக் கண்டா தனியா விசை முடுக்கிக்கும், அவங்க வாயிலேருந்து எந்த முத்து விழுதுன்னு வாயைப் பிளந்துட்டு கைகட்டி கேட்டுட்டே இருப்பாரு, வந்தா, வந்தவங்க தானாவோ, நான் விரட்டியடிச்சோ கிளம்பினாத்தான் உண்டு. மாதக் கணக்கிலே குந்தியிருந்தாலும் மனுசனுக்குத் தெரியாது.

“ஆனா, இந்தச் சாமியார், சோத்துச் சாமியாரில்லே. வந்து மூணு நாள்தான் நம்ம வீட்டுலேயே தங்கி இருந்தது. பேச்சுக்கூட ரொம்ப இல்லே. பேசறது ஒண்ணு ரெண்டு ஆனாலும் எல்லாம் தூக்கிவாரிப் போடற பேச்சுத்தான். கங்காளம் தயிரையும் கடைஞ்சு உள்ளங்கையிலேயே உண்டையா வெண்ணெயை ஏந்திட்டாப் போலே, இந்த உலகமே தனக்குச் சொந்த மாக்கிட்ட தனி யானை நடை; கழுத்தை வெட்டி வெட்டி மொறைப்பா பார்வை. அப்பா! ஆம்பளைகூடத் தைரியமா தலைநிமிந்து பாக்கமாட்டான். முவத்துல அப்படி ஒரு தகதகப்பு. நடுக்காட்டுலே, நடு இடத்திலே தீவட்டி ரெண்டு சொருவி வெச்சாப்போலே நமக்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/147&oldid=1025755" இலிருந்து மீள்விக்கப்பட்டது