பக்கம்:அஞ்சலி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138 லா.ச. ராமாமிருதம்

இல்லாமே தனக்கு மாத்திரம் தனியா பத்திட்டு எரியும் கண் எதிரே வந்தவங்க நெஞ்சு மாம்பழத்தெப் பிழிஞ்சாப் போலே சக்கையும் சாறுமா ஆயிடும்.

“மொத நாளுலேயே மனுசனை கண்டுகிட்டேன். இது மத்தப் பண்டாரங்க மாதிரியில்லேன்னு இவரும் அவரும் சேர்ந்து குந்திட்டு சாப்பிடறாங்க. வீட்டுலே விருந்தாளின்னு கூட நாலு பதார்த்தம் ஆக்கியிருந்தேன். உருளைக்கிழங்கு புட்டு செய்து, கீரையைக் கடைஞ்சு, பூசனிக்காயும் காராமணியும் கூட்டிக் காச்சியிருந்தேன், கத்தரிக்காசாம்பாரு, ரசம், மோருகூட.

இலையிலே பதார்த்தத்தை ரெண்டுதரம் வெச்சிட்டு மறுபடியும் விருந்தாளி வெக்கத்துலே தன் லவுத்துக்கு வஞ்சகம் செய்யக்கூடாதுன்னு ‘இன்னும் என்னா வேணும்’னு கேட்டேன்.

அதுக்கு என்னை நெருப்பாட்டம் முளிச்சுப் பாத்து, “என்ன வேணும்னு கேக்கறயே அம்மா! நான் கேக்கறதை யெல்லாம் நீ கொடுத்துட முடியுமா? நீ கொடுக்கறதெல்லாம் நான் கேக்க முடியுமா?” என்று கேட்டாரு. எனக்கு என்னவோ மூஞ்சிலே அடிச்சாப் போலே ஆயிடுச்சு, பயமாப்போச்சு. அப்புறம் சாப்பாட்டு வேளைவிட்டு மத்த வேளை அவர் எதிரேகூட வரதில்லை.

நடைத் திண்ணைலே, காலை முறுக்கி சப்பளங் கொட்டி மணிக்கணக்குலே நெட்டா இமைகொட்டாமே குந்தியிருப்பார். இவரு அவருக்குக் காவலா மாரிலே கை கட்டி வாசல்லே நின்னுட்டு இருப்பாரு, இவங்க ரெண்டு பேரும் இப்படி யிருக்கறத்தைப் பார்த்து என்னவோ பயமெடுத்துப் போச்சு.

இதே மாதிரி ரெண்டு நாளாச்சு. மூணாம் நாள் வந்தது. இன்னிக்கு நான் பட்டினத்தாள் போனவழி தான் பாேவபோறேன். ஆனா, போன இடத்திலும் அன்னிக்கு நான் மறக்கமாட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/148&oldid=1033462" இலிருந்து மீள்விக்கப்பட்டது