பக்கம்:அஞ்சலி.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூரணி 141

“அப்புறம் என்ன? ஏது அப்படி மூச்சு வாங்குது உனக்கு?”

“உடம்பு பெரிசு பாரு, என்ன சொல்ல வந்தேன்னா என்னை நம்பி உன் கஷ்டத்தைக்கூட என்னண்டை நீ சொல்லிக்கல்லியா?”

“உன்கிட்டே என்னாத்தை நான் சொல்லிக்கிட்டேன்?”

“இதென்ன, போசினாத்தான் நீ சொன்னாப் போலேயா? நீ சொன்னதைக் கேட்டுக்கிட்டிருந்தால் நீ சொன்னாப்போல இல்லியா? முதுவைத் திருப்பி உனக்குக் காட்டறேன்னு கோவம் பண்ணாதே, ‘தோ பார், பாத்தியா?”

பூரணி பார்த்தாள். கைக்கெட்டிய வரை அடுக்கடுக்காய் அதன்மேல் அடிவரை, சாணிப் பொட்டுக்கள் நின்று கொண்டிருந்தன.

ஞாபகம் வந்துவிட்டது. அவளுக்குக் கண்களில் ஜலம் துளும்பியது. அவள் கணவன் வீட்டை விட்டு ஞானமணி சாமியாரைத் தொடர்ந்து போன நாட்களை, அவள் அப்படித்தான் நாளுக்கு நாள் எண்ணியிருந்தாள்.

இத்தனை நாளுலே எப்பவுமே என் வீட்டுக்காரை ஒரே மாதிரி எண்ணியிருப்பேனோ? எப்படி சொல்றது? மஞ்சாவும் குங்குமமுமிட்டு இன்னும் வவுத்திலே அரிசியை வெச்சிருக்கும் நடுவூட்டுக் குதிரை எதிரே வெச்சுக்கிட்டு...

ஒரு ஒரு நாளைக்கு ஒரு ஒரு நினைப்பு. இல்லாட்டி ஒரெ நினைப்பு. ஆனா ஒவ்வொரு நாளுக்கும் மறவாமே ஒரு பொட்டு.

என்னிக்கு வருவாரு? என்னிக்கு வருவாருன்னு பொட்டு, பொட்டு, பொட்டு...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/151&oldid=1033465" இருந்து மீள்விக்கப்பட்டது