பக்கம்:அஞ்சலி.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூரணி 143

இனிமே உன்னைப்பத்தி நான் நெனைக்கப் போறதில்லே. நீ வரவே தேவையில்லே...என் பாவத்தைக் கட்டிக்கிட்டு போ, போ, போ...!

அம்மாடி தாங்க முடியல்லியே!

நடுவூட்டுத் தெய்வங்களா, பூவாடைத் தெய்வங்களா , எங்கே போயிட்டீங்க நீங்க...? அத்தை! நீ என்னைக் கோவம் பண்ணாதே. இனி எனக்குத் தாங்கல்லே. இந்த ஒண்ணரை வருசம் பொறுத்தது போதும். ஊரெல்லாம் கேக்குது. பத்தாமே என் கொழந்தைங்க கேக்க ஆரம்பிச்சுட்டுது. என் வூட்டுக்குப் படியேறி வந்து நீ பொண்ணு கேட்டு என்னைக் கூட்டி வந்தே. நீ செத்துாட்டா அத்தோடே உன் பொறுப்பு போச்சுன்னு எண்ணாதே. இந்தக் குடும்பத்துக்கு என்ன வந்தாலும் அது உன் வினைதான். அதனாலே உன்கிட்டே சொல்லறேன். இன்னிக்கு வெள்ளிக்கிழமை. கொழந்தைங்க தூங்குறாங்க நடுராவுலே எழுந்திருச்சு சுரைக் குடுக்கைலிருந்து திருநீறைத் தரிச்சுக்கிட்டு, நடுவூட்டுலே கல்பூரத்தை ஏத்திவைச்சி வெறும் வவுத்தோடு தலைப்பை இடுப்புலே சொருவிகிட்டு இந்த வார்த்தையைச் சொல்லுறேன். இன்னி எட்டா நாளைக்குள்ளே எனக்கு ஏதாச்சும் விடியாட்டி—சரி, அப்பறம் அவ்வளவுதான். என்னை ஒண்னும் குத்தம் சொல்லாதே, வீட்டுக்குக் கெட்டபேரை வெச்சுட்டுப் பூட்டான்னு. ஆமா சொல்லிட்டேன். இன்னிக்கு குறியைக் குங்குமத்துலே வெக்கறேன், ஆமா.

எட்டா நாள் வெள்ளிக்கிளமை விடிஞ்சத்தை இப்போ நெனச்சா—மனசு என்னவோ தோச்சு உலர்த்தி அழுக்கு விட்டு துல்லியமா காத்துலே ஆடி அசையற சல்லாத் துணியாட்டமா—அவ்வளவு லேசா, நினைப்புலகஷ்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/153&oldid=1025774" இருந்து மீள்விக்கப்பட்டது