பக்கம்:அஞ்சலி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146 லா.ச.ராமாமிருதம்

முதுவை சுரண்டித் தேச்சுக் குளிப்பாட்டறேன், கோவில்லே சாமிக்கு அபிசேகம் செய்யறத்துக்குக் குறைஞ்சுபோச்சா? மண்டையிலே ஈரம் உராயாமே, அவசரமா நெருப்புலே சாம்பிராணியைக் கொட்டி அது மேலே கூடையைக் கவுத்து மூடி அதுமேலே என் புருசன் தலையைப் பிடிக்கறேன். புகை சமாளிச்சுக்கிட்டு என் மனசு வரைக்கும் புகுந்து மணக்குது. இது கோவில்லே தூபம் காட்டற மாரிதியில்லியா? கேக்கறேன். இதோ சமயலுக்கு அடுப்பு பத்தவெக்கறேன். இது ஓமம் வளத்து மாதியில்லே? சுருக்கா சோறு கொதிக்குது கொடியிலே, ரஜம் காயுது. இது நிவேதனம் இல்லியா தெய்வத்துக்கும் படைச்சாத்தான் படைப்பா? பிசைஞ்சு இவர் கையிலே உண்டை உண்டையா கொடுத்து உள்ளே செலுத்துறேனே இது நிவேதனம் இல்லியா? கோவில்லேயிருக்கற சாமியுந்தான் பேசல்லே! இவரும்தான் பேசல்லே. இவருக்குக் கை களுவ சொம்புலே தண்ணி கொடுத்திட்டு கொல்லைப்புறம் கிணத்தைச் சுத்திவந்து விழுந்து கும்பிட்டேன். இதுவுந்தான் என்னைக் காப்பாத்திச்சு. இது என்ன தோண்டின பூமிதானே? இந்த நிமிசம் எனக்கு யாருமேலேயும் கோவமில்லே. எனக்கு எல்லாரும் நல்லவங்கதான்.

அதுக்கப்புறம் நல்லது பொல்லாது எல்லாம் ஆயிரம் நடந்தது. எத்தனையோ வருசமாச்சு, நாங்க ரெண்டு பேருமே உருவே மாறிட்டோம். பசங்க பெரிசாப் போயி பொண்ணு கட்டி என் குழந்தைகளுக்கு குழந்தைங்க பெருகுது. ஒண்ணொண்னு ஒரு ஒரு மாதிரியா தலை பெருக்குது. ஒரு பையன் குளிக்கப்போன இடத்தில் தண்ணியோடேயே பூட்டான். அடையாளத்துக்கு உடல் கூட கிடைக்கல்லே. அது சாக்கா நான் சீக்காவும் படுத்தாச்சி. அதெல்லாம் விவரமா நினைக்க இப்போ நேரமுமில்லே. நெனக்கறத்துக்கு ஒண்னுமில்லேன்னும் வெச்சுக்கோ. ஆனா இந்த நிமிசத்தை நினை! அன்னிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/156&oldid=1025805" இலிருந்து மீள்விக்கப்பட்டது