பக்கம்:அஞ்சலி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூரணி 147

என் புருசன் அசந்து படுத்து வாயை லேசாத் திறந்துட்டு துரங்கறப்போ, அந்த முவத்தை நானா விளக்கைப் புடிச்சு பாக்கறப்போ, மனசு நிறைஞ்சு நிக்கி.

மெய்யா சொல்றேன். நீ நாளை காலைல எழுந்திருச்சா, நீ எங்கே போனே எங்கேயிருந்தே, என்ன பண்ணே ஒண்ணு கேக்கமாட்டேன். நீயும் நீயா சொல்லமாட்டே. எனக்குத் தெரியும், உன் நெஞ்சுக்கணம். ஆனால், நான் கேக்கமாட்டேன்; எனக்கு கேக்கத் தேவையில்லே. என் புருசன் எனக்குக் கொழந்தையானப்பறம் அவன் எங்கே போனான்னு எனக்கு கேட்டு அறியத் தேவையில்லே. எனக்குத் தெரிஞ்சு போச்சு, உனக்குத் தெரியாட்டியும் நீ, எங்கேயும் போவல்லேன்னு. உன் மாதிரி நான் அறியனும்னு ஆசைப்படல்லே. ஆனா எனக்குத் தெரிஞ்சது ஒனக்குத் தெரியாது. நீயும் எங்கேயும் போவல்லே. உன் குரு ஞானமணி சாமியும் எங்கேயும் போவல்லே. அதானோ என்னவோ அஞ்சு வருசம் களிச்சு அவரு இங்கேயே வந்து சமாதியானாரு. எனக்குத் தெரியும்னு அவருக்குத் தெரிஞ்சு போச்சோ என்னவோ? எது எப்படியிருந்தா என்ன? அந்ந நிமிசத்தைச் சொல்லு. தராசுகட்டி மனம் முள்ளு முனையிலே நின்னுபோச்சு, இப்போ எனக்கு ஒத்தருமே தேவையில்லே. என் புருசன் கூடத் தேவையில்ல. நானே எனக்குத் தேவையில்லே. இது ஒரு ஆச்சரியமாத்தான் இருக்குது. எல்லாமே நிறைஞ்சு எனக்கு ஒண்னுந் தேவையில்லாமே...”

அவள் கை மெதுவாய் அவள் புருஷனைத் தேடி நகர்ந்து விழுந்தது. முதலியார் எழுந்து அவள் மார்மேல் மற்றக் கையுடன் சேர்த்து வைத்தார். மாடியேறி அவசர அவசரமாய் யாரோ வந்தார்.

அப்பா அப்பா, பாஞ்சாலிக்கு இடுப்பு நோவு, நடு வீட்டிலே.”... வந்தவன் கட்டிலில் கிடந்த பூரணியைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/157&oldid=1025814" இலிருந்து மீள்விக்கப்பட்டது