பக்கம்:அஞ்சலி.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148 லா. ச. ராமாமிருதம்

கண்டு, “அம்மா அம்மா, போயிட்டியா” என ஓலமிட ஆரம்பித்தான். முதலியார் அவன் அழுகையை அடக்கிக் கையமர்த்தினார்.

கீழிருந்து ‘வீல்’ என்று ஒரு புதுக் குரல் தொண்டையைக் கிழித்துக்கொண்டு எழும்பிற்று.

பேரப்பையன் குடுகுடுவென ஏறி உள்ளே ஓடி வந்தான். “ஆயா—ஆயா—” அவனுக்கு மூச்சு இறைத்தது. “எனக்குத் தங்கச்சி பொறந்திடுச்சி...”

முதலியார் முகத்தில் ரகசிய ஒளி வீசிற்று. அவர் மாடிச்சுவர்மேல் தாங்கியபடி சாவதானமாய், படிப்படியாய் கீழே இறங்கிச் சென்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/158&oldid=1033468" இருந்து மீள்விக்கப்பட்டது