பக்கம்:அஞ்சலி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தரங்கிணி 7

 அதன் பக்கத்திலே ஒரு தாழம்புதர். அதுவரைக்கும் போனதுமே, அம்மா, ‘என்னை இந்த மறைவிலே விட்டுடுங்கோ, விட்டுடுங்கோ’ன்னுட்டா.

“அப்பா அப்படியே அங்கே விட்டுட்டார். அங்கே அம்மா, என்னைத் தாழம் புதரண்டை பெத்திண்டிருக்கையில், இங்கே அப்பா இந்த மணல்லே, குட்டி போட்ட பூனை மாதிரி எப்படி அலைஞ்சிருப்பார் என்கிறதை இப்போ நினைச்சாக்கூட சிரிப்பாய் வரது.

“அம்மாவுக்கு திடீர்னு ஆச்சர்யமான பலந்தானிருந்திருக்கணும். அந்த நிமிஷத்துலே, ‘காவேரியம்மா, இந்த நிலைமையிலிருந்து, இங்கே வேறொருத்தரும் வராமல், என் மானம் தப்பி, என்னை மீட்டேன்னா, பொறந்த குழந்தையை உன்னிடத்திலேயே அலம்பிக்கறேன். இது உன் குழந்தை” என்று வேண்டிண்டாளாம். அப்படியே பாருங்கோ, நான் பிறந்ததுமே, அந்த உடம்போடே இங்கே வந்து இந்த ஜலத்துலே என்னை அலம்பி, தோளிலே போட்டுண்டு வீடு வந்து சேர்ந்துட்டாள்.

“ஆனால் அம்மாவுக்கு அதுக்குவேலே அவள் பலம் தோத்துப்போச்சு.

“அந்த ஆயாசம்தான் தாங்கலையோ, இல்லாட்டா, இப்படி நடுவழியிலே என்னைப் பெக்கும்படி நேர்ந்து விட்ட வெட்கமோ, அப்பா திருந்தாத ஏக்கமோ எதுவோ, பெத்ததே சாக்காய்க் கிடந்து ஒரு மாசத்துக்கெல்லாம் செத்துப்போயிட்டா. பாச்சையா வெளுத்த ஊசி உடம்போடே பாட்டி என்னைக் கூடத்திலே வளர்த்தி விட்டிருப்பாளாம். வம்பு அடிக்கவும், கரண்டியைத் ‘தலைவெட்டி’ சர்க்கரை, காப்பிப் பொடி, கடுகு, உப்பு கடன் வாங்கவும் கொடுக்கவும் வராளே, பக்கத்தாத்து ராதா, எதிர்த்தாத்து சீதா, இவாளோ அல்லது பத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/17&oldid=1020526" இலிருந்து மீள்விக்கப்பட்டது