பக்கம்:அஞ்சலி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 161

“என்ன இது? குழலை ஊதிப் புயலைக் கிளப்பி விட்டாய்?”

நான் புரியாத பரவசத்தில் ஆழ்ந்தேன்

மோஹினி.

***

நள்ளிரவில் நான் விழித்துக்கொண்டேன். மையிருட்டு மரத்தில் இலைகள் அசையவில்லை. அந்த சர்வ மெளனத்தாலேயே எனக்கு விழிப்பு வந்திருக்கும்.

எதிர் ஜன்னலிலிருந்து பேச்சின் அரவம் மிதந்து வந்தது. எழுந்து உட்கார்ந்தேன். வார்த்தைகள் சப்த சுத்தமாய் அர்த்த கனத்துடன், காற்றுவெளியில் கோலிகள் போல் உருண்டன.

“நான் இன்னிக்கு உங்களை விடப்போவதில்லை—உஷ்—விளக்கைப் போடாதேங்கோ—வால்மீகி முழிச்சுக்கப்போறான்—”

“Alright, விஷயம் என்ன?”

அம்மாவின் சிரிப்பு வேதனை பண்ணிற்று.

“அவ்வளவு சுருக்க என்னைத் தட்டிக் ‘கழிச்சுலாம்னு பார்க்கறேளா? இன்னிக்கு ரெண்டுலே ஒன்னு தெரியணும்—”

“உஷ் பாகீ உனக்கு உடம்பு சரியில்லே”

“எனத்கு நன்னாத் தெரியும். அதனாலேதானே எனக்கு இவ்வளவு தைரியம்! நான் இந்தப் பூட்டிலே இருந்து பிழைக்கமாட்டேன்னு உங்களுக்குத் தெரியுமா?”

“அசட்டுப் பிசட்டுன்னு பேத்தாதே—”

அ.—11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/171&oldid=1033477" இலிருந்து மீள்விக்கப்பட்டது