பக்கம்:அஞ்சலி.pdf/173

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 163

உதடுகள் கூட அதிகமாய் அசையா. பேச்சே மனமிலாது அவரிடமிருந்து பிடுங்கும் ஒரு அவசியம். அவரைச் சுற்றி எப்பவும் ஆழ்ந்த மெளனத்தின் விறுவிறுப்பு இயங்கியது.

அப்பா ஒற்றைநாடியாய் வளையாத முதுகுடன் பின்னால் கை கட்டிக் கொண்டு நிற்பார். எனக்கு மணிக்கூண்டின் நினைப்பு வரும். அப்பா ஆயிரம் புயலிடையிலும் அணையா விளக்கு.

அப்பாவின் குரல் எப்பவுமே சற்றுத் தாழ்ந்து குமுறும் கனத்துடன் இனிப்பான அச்சம் நிரம்பியிருக்கும். அப்பாவிடம் எனக்குப் புரியாத பயம் எப்பவும் இருந்து கொண்டேயிருந்தது. இத்தனைக்கும் அவர் எனக்கு எதுவும் மறுத்ததில்லை. என்னை எதற்கு, ஏன் எங்கே, எப்போ என்று கேட்டதில்லை. நான் என்னைப் பெற்றவர்களின் ஒரே பிள்ளை மாத்திரம் இல்லை. ஒரே பேறு.

இவர்கள் எந்த ஏடுகளைப் புரட்டுகிறார்கள்? இருபத்திமூன்று வருஷத்து ஏடுகளையல்லவா புரட்டுகிறார்கள்? இருபத்திமூன்று வருஷங்களுக்கு முன் ஒரிரவை, எதற்குப் புரட்டுகிறார்கள்? எனக்கு இப்பொழுது இருபத்துமூன்று வயதாகிறது. எனக்குப் புரிந்ததும் புரியாததுமாய் என்னைப் பற்றிய ஏடுகளையா புரட்டுகிறார்கள்?

இத்தனை நாளாயில்லாமல் இன்றைக்கேன் புரட்டுகிறார்கள்?

அம்மாவின் குரல் அப்பொழுது சற்று உரத்து எழுந்தது.

“இல்லை இல்லை. நானே உங்களிடம் சொல்லத்தான் பார்த்தேன். உங்களுக்கு நினைவிருக்கோ! அன்னி ஒரு நாள் நீங்கள் ஜன்னலண்டை பின்னால் கைகோத்துண்டு நின்னுண்டிருந்தேளா! அப்போ நீங்கள் என்னோடே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/173&oldid=1025906" இருந்து மீள்விக்கப்பட்டது