பக்கம்:அஞ்சலி.pdf/179

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 169

உள்ளே போகவில்லை.

“—நீங்கள் நம்புவேளா? நீங்கள் நம்ப வேண்டாம். காற்றினுடைய ரூபத்தைக் கண்ணாலே நான் பார்த்தேன். அந்தப் புயலின் சுழிப்பிலிருந்து முதன் முதலில் எனக்கு ஒரு முழிதான் தெரிஞ்சுது. பிரம்மாண்டமான ஒரே முழி அதன் நடுவிலே வண்டிச் சக்கரம் மாதிரி ஒரு கறுப்பு முழி என்னையே பார்த்தது. நான் எந்தப் பக்கம் திரும்பி னாலும் எங்கே ஒடப் பார்த்தாலும் என்னையே உறுத்துப் பார்த்துண்டிருந்தது. புருவ வளைவில் கோரைப்புதர்கள் காடாய் அடர்ந்து சிலிர்த்தது. கூர் வளைஞ்ச கத்தியை வரிசையாய் நட்டாற்போல் ரப்பை மயிர்கள்; அந்தக் கறுப்பு முழி என்னைப் பார்க்கப் பார்க்க அதனுள்ளே கோபக் கனல் குழம்பாய்க் கொதிச்சு நுரை கக்கறது. அதிலேருந்து ஒரு உருவம் உண்டாகிக் கிளம்பித்து.

அது யாருன்னு தெரியல்லே. நான் முன்பின் பார்த்ததில்லை. முகத்தைத் திரை போட்டு மறைச்சாப்போல் ஒண்ணும் தெரியல்லே. திறந்த கட்டுமஸ்தான உடம்பு, இடுப்பில் ஒரு முழம் தோல். ஆணா பெண்ணா என்றுகூட நிச்சயமாய்த் தெரியல்லே. அதன் கையில் ஒரு வில். அதை அது வளைச்சு அதில் இறக்கை கட்டின அம்பு ஒண்ணைத் தொடுத்து, அந்த உருவம் என்னைக் குறி பார்த்தது. நான் எந்தப் பக்கம் ஒடினாலும் அந்தப் பார்வையும் அந்த வில்லும் என்னையே நோக்கி வளைஞ்சது. அப்படி என்னைப் பார்க்கும் குறியிலேயே என் மூச்சையே தனக்கு இழுத்துக்கற மாதிரி எனக்குத் திடீர்னு மூச்சுத் திணறி, என் உடம்புள்ளே காத்து இல்லாமல் எனக்கு மூஞ்சியும் முழியும் வெளியே பிதுங்கிடற மாதிரி ஆயிடுத்து. அந்தப் பார்வையில் கொடூரமில்லை. ஆனால் இரக்கமேயில்லை. அந்தக் குறியை நான் தப்ப முடியாதுன்னு எனக்குத் தெரிஞ்சுபோச்சு. அந்த எண்ணம் எனக்கு எப்போ பட்டதோ அந்த கணமே அம்பு வில்லை விட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/179&oldid=1026001" இருந்து மீள்விக்கப்பட்டது