பக்கம்:அஞ்சலி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 173

கள் கிலுகிலுத்தன. மூக்கில் அணிந்த வைர முக்குத்தி விட்டுவிட்டு மின்னிற்று. அவள் முகத்தின் இளமுறுவல், காற்றில் ஆடும் அகல் சுடர்போலும் என்னை விளித்தது.

“வா—ல்—மீ—கீ!!-”

“அம்மா!” அலறிக்கொண்டே இரு கைகளையும் விரித்துக்கொண்டு அந்தத் தோற்றத்தை நோக்கி ஓடினேன். -

“வால்மீகி!”—என்னெதிர் ஒர் உருவம் ஓடிவந்து தடுத்து அணைத்துக் கொண்டது.

“அம்மா—அம்மா!” அதன் மார்பில் என் முகத்தைப் புதைத்துக் கொண்டேன். என் சிரத்தைத் தன் தோளில் தாங்கியபடி தாயைப்போல் என் தலையைக் கோதித் தடவினாள். அவள் கண்ணிர் என்முகத்தை நனைத்து என் கண்ணீருடன் கலந்தது

இன்று அவள் மருந்துக்குக்கூட ஒரு நகை அணியவில்லை தலையில் பூக்கூட இல்லை. கண்ணைக் கூசும் வெள்ளை ஆடையின் கரையோரங்கள் சிற்றலைகள்போல் காற்றில் அலைந்து துவண்டன. கைகளில் வளையல் கூட இல்லை. ஆனால், இந்த வெறிச்சான வெள்ளைக்கோலம் கூட எப்படியோ அவளுக்கு ஏர்வையாத் தானிருந்தது. இறுக வாரி, எடுப்பாய் இழுத்து இட்ட கொண்டையுடன், பாலட்சூபிணிபோல் அவள் துலங்கினாள். என் துயரம் தாளாது யாவும் துறந்துவிட்ட ராஜகுமாரி

“எனக்கு அங்கு வரவே பயமாயிருந்தது. வால்மீகி—எனக்கு நினைவு தெரிஞ்சதே முதல் என் வீட்டில் இதுவரை சாவு நேர்ந்ததில்லை. அதனாலேயே எனக்கு அங்கே வரப் பயமாயிருந்தது. வால்மீகி கஷ்டம்னா என்னென்னே தெரியாமல் நான் இதுவரை வளந்துட்டேன். உன்னோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/183&oldid=1026008" இலிருந்து மீள்விக்கப்பட்டது