பக்கம்:அஞ்சலி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 175

எல்லாம்,

“உன் பேர் காயத்ரீ

என்பேர் வால்மீகி”

எனும் உறவின் ஆதாரத்தில் கொக்கி மாட்டிக் கொண்டு ஊஞ்சலாடின.

“ஓ—ஹோ—ய்!”

இரவு நான் ஒரு கனவு கண்டேன்.

என்மேல் ஒரு ப்ரம்மாண்டமான பட்சி உட்கார்ந்திருந்தது. அதன் முகம் அவள் முகம். மூக்கு மாத்திரம் நீண்டு கூரிய வாளாய் என் மார்பைக் இடைந்து தோண்டித் கொண்டிருந்தது. அவளுடைய சந்தனக் கன்னங்களை, வியந்த என் ஆசை, என் பிராணாவஸ்தையையும் மீறியது. என் இதயத்தைத் தோண்டுகையில் அது வெளியே விசிறும் குருதி என் கண்ணிலேயே தெறித்தது. ஆனால் அந்தப் பட்சி இன்னமும் தோண்டிக்கொண்டுடேயிருந்தது.

அந்தப் பள்ளத்திலிருந்து இனியதோர் குரல் கிளம்பிற்று. தட்டுத்தடுமாறியபடி ஒரு பொன்குருவி பள்ளத்திலிருந்து வெளி ஏறிற்று. மார் முகட்டில் நின்று தன்னைச் சுற்றி ஒருமுறை நோக்கியது. அதன் தலைக் கொண்டை தகதகத்தது. பொன்னுடவில் அழகிய புள்ளிகள், பொற்கதிர்களைக் கொத்தாய்ப் பிடித்தாற்போல் நீண்ட வால். இத்தனை நாள் என் இதயத்துள் இது எங்கே பயிராகியிருந்தது? தன் தங்கச் சிறகுகளை விரித்து, மார்த் தட்டிலிருந்து எழும்பி அறையைச் சுற்றிப் பறந்தது. அதன் பொன் கதியை, மங்கிக்கொண்டேயிருக்கும் என் கண்கள் பின்தொடர்ந்தன, செவிகளில் ரீங்காரம் நிரம்பிற்று. இரண்டு வட்டங்களுக்கு மேல் அதற்குச் சக்தியில்லை. சிறகுகள் மடிந்தன. என் மார்மேல் காத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/185&oldid=1026109" இலிருந்து மீள்விக்கப்பட்டது