பக்கம்:அஞ்சலி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 177

ஆனால் நான் அசட்டுத்தனமாய் முன்பின் புரியாயாததுபோல் சமாளிக்கப் பார்த்தேன்.

“என்ன சொல்கிறீர்கள் அப்பா?”

நான் என்ன சொல்கிறேன் என்று உனக்குத் தெரியும். வீண் வார்த்தை வளர்த்த வேண்டாம். அவள் உனக்கு ஏற்றவள் அல்ல.

அப்பா ஜன்னலண்டை பாேய் நின்றார். அப்பாவுக்கு இப்போது ஐம்பது வயதாவது இருக்கும். ஆனால் ஜம்பது மதிக்க முடியாது. அவரிடம் மாறாத இளமை இயங்கிக்கொண்டிருந்தது. இத்தனைக்கும் வேகமும் விறு விறுப்பான பாவனைகள் அவரிடமில்லை. தலைமயிர் ஒன்றுகூட நரைக்கவில்லை. அவர் உடை எப்பவும் ஒரே மாதிரித்தான். தும்பை போன்று துல்லியமான வெள்ளை ஜிப்பா. பூமியில் புரளும் தூய வெள்ளை வேஷ்டி. வேஷ்டி விளிம்பில் ஒரு இம்மி அழுக்குக்கூட ஏறாது. அவர் நடக்கையில் பூமியில் பாதம் பதிவது தெரியாது. கழுத்து வளைவிலிருந்து விரியும் அகன்ற தோள்கள். அப்பாவும் நானும் சேர்ந்து போனால் பார்ப்பவர் அண்ணன் தம்பி யென்றே மதிப்பார்கள். ஆனால் அப்பாவும் நானும் இதுவரை சேர்ந்து போனதேயில்லை

இந்த சமயத்தில் சம்பந்தமேயிலாத சிறு விவரங்கள் ஏன் கவனத்துக்கு வெளிப்படுகின்றன என்றுதான் புரியவில்லை.

“என்ன நான் சொல்வது காது கேட்கிறதா?” அப்பா முகந் திரும்பாமலே ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டு கேட்டார்.

அப்பாவிடம் இன்னொரு சுபாவம். யாரையும் நேர் முகம் பார்த்துப் பேசமாட்டார். சங்கோசத்தாலல்ல. அலட்சிய பாவமுமல்ல அது. காற்றையோ வெளியையோ

அ.—12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/187&oldid=1026111" இலிருந்து மீள்விக்கப்பட்டது