பக்கம்:அஞ்சலி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தரங்கிணி 9

தான் நான் ஆயிட்டேன்—வேண்டியவா வேண்டாதவா எல்லாருக்கும் ஒண்ணாய், ஆத்து ஜலம் மாதிரி,

எங்கெங்கோ எப்படி எப்படியோ, ஒரு சமயம் ஒடுங்கி,

ஒரு சமயம் பெருகி ஒரு சமயம் ஒதுங்கி, ஒரு சமயம் நெருங்கி, எல்லோர் கைப்பட, எல்லாச் சொல்லும் பட வளர்ந்தேன்—’

அவள் குரல் நடுங்கிற்று.

“தரங்கிணி! எப்படிப் பேசுகிறாய்! உன் வாக்கைக் கேட்கையில் அசூயையாய்க்கூட இருக்கிறது.’

“எதுக்கு?”

“கனமிகுந்த அர்த்தங்களை நய மிகுந்த வார்த்தைகளில் எப்படி உன்னால் இழைக்க முடிகிறது? அதுவும் கொஞ்சம்கூடக் கசப்பில்லாமல்!” -

‘நீங்கள் சொல்வதெல்லாம் உங்களுக்குத்தான் புரியும். இங்கே இப்படி உட்கார்ந்திருக்கையில், இப்படித்தான் வார்த்தைகள் வரது. அவ்வப்போ மனசில் தோன்றுவதை அப்படியே தோன்றியபடி உங்களுக்கு மாற்றிவிடப் பார்க்கிறேன்; அவ்வளவுதான்.”

ஆழ்ந்த யோசனையில் அவன் குரல் தாழ்ந்தது.

“அது அவ்வளவு சுலப மென்று நினைக்கிறாயா?”

“என் சின்ன வயசில் பாவாடையும் சொக்காயுமாய் நான் வளைய வரும் நாளில், அடிக்கடி இங்கே வந்து, பின்னால் கையைக் கட்டிண்டு கரைமேல் நிற்பேன். இது எனக்கு நன்னா நினைவிருக்கு. அம்மா என்னைப் பெத்த இடத்தைச் சுத்திச் சுத்தி வருவேன். அந்த இடத்திலிருந்து இந்தக் கரைக்கு நேர்க்கோட்டில் நடந்துவந்து இரண்டையும் ஒண்ணாகச் சேர்த்துவிட்டதாக நானே நினைச்சுப்பேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/19&oldid=1033380" இலிருந்து மீள்விக்கப்பட்டது