பக்கம்:அஞ்சலி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 183

“பின் உன்மேல் எப்பவும் ஒரு பரிமளம் வீசிக்கொண்டே இருக்கிறதே?”

“என் வயசின் வாசனையாயிருக்கும். அல்லது என் மேல் உன் ஆசையின் வாசனையா இருக்கும். உனக்கு என் மேல் எவ்வளவு ஆசையிருக்கும்?”

“எவ்வளவோ?” திடீரென்று என் கண்கள் மங்கின. நெற்றிப் .பாெட்டுள் சாவி முடுக்கிவிட்டாற்போல் சக்கரங்கள் சுழன்றன:

“ஓம்பு: ஓம்புவ: ஓம்ஸுவ: ஓம்தப!”

மூச்சுத் திணறிற்று. என் மடியில் மூன்று காயத்ரீகள் உட்கார்ந்திருப்பதுபோல் பார்வை நிலை தடுமாறிற்று.

“என்ன ஒரு பசுங்காளைக் கன்றுக் குட்டியளவு உயரம் இருக்குமா?” தன் கையால் அந்தக் கன்றுக்குட்டியின் உயரத்தைத் திட்டம் பிடித்துக் காண்பித்தாள்.

“வால்மீகி, நான் வந்ததே முதல் நீ ரொம்பவும் இளைத்துவிட்டாய். நான்தான் குண்டாயிருக்கிறேன்.”

“நீ நன்றாயிருக்கிறாய்.”

“அதாவது குண்டாயிருக்கிறேன் என்று சொல்லு.”

“சொல்லமாட்டேன்.”

“சொல்லமாட்டாய். ஆனால் அப்படித்தானே!”

“.......”

“சொல்லு. அப்படித்தானே!”

“காயத்ரீ, தர்க்கம் பண்ணாதே.”

“சண்டைக்கிழுக்கிறேன் என்கிறாய் அல்லவா?”

“நான் ஒன்றுமே சொல்லவில்லையே!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/193&oldid=1033488" இலிருந்து மீள்விக்கப்பட்டது