பக்கம்:அஞ்சலி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 189

அல்லது பாலைவனத்தில் ஊற்றுப்போலும், நீண்ட வரண்ட இடைவெளிகளுக்கிடையே, நிழல் காற்று வீசும் இன்ப வேளைகள்.

மிச்ச நாட்கள் கானலை மெய்யென நினைத்துத் தேடியலைந்து இளைத்துத் தேயும் கானல் நீர் நாட்கள்.

ஆனால் எப்பொழுதும் காயத்ரியை மூச்சாய் விடும் மூச்சு வேலைகள்.

***

இப்பொழுது அவள் என்னை விளித்தபோது உடனே போகாது நான் என்னையே பார்த்துக்கொள்ளும் பரீட்சை—வீண் பரீட்சை என்று எனக்கே தெரியும்.

சட்டென அவள் விரலை உதறினாள். அவள் முகம் வலியில் சுளித்தது. அவசரமாய் அவளிடம் ஒடினேன். விரல் நுனியில் இரத்தம் துளித்து நின்றது. அவள் விரலை வாயில் வைத்து உறிஞ்சினேன். அதில் ஒரு இன்பம். அல்லது ஆறுதல். அல்லது நம்பிக்கை. இப்படியாவது அவள் நானாவோ, நான் அவளாவோ ஆகிவிட முடியாதா?

“நம் கோட்டக்காரன் உபயோகமில்லை” என்றாள் கோபத்துடன்.

“நீதானே செடியைச் சீண்டிக் கொண்டிருந்தாய்! நீ முள்ளைக் குத்திக் கொண்டால், அது தோட்டக்காரன் பாவமா?”

“அதெல்லாய் எனக்குத் தெரியாது. அப்பா, எப்படிக் கடுக்கிறது! நாளைக்கு இந்தச் செடி என் ஜன்னலண்டை வேண்டாம். தோட்டம் தோட்டமாவா இருக்கிறது: காடான்னா இருக்கு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/199&oldid=1033493" இலிருந்து மீள்விக்கப்பட்டது