பக்கம்:அஞ்சலி.pdf/203

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 193

“ஆ!” வலியில் முனகினேன். மண்டையின் பின்புறம் ‘விண் விண்’னெனத் தெறித்தது.

“நீ செத்துப் போயிட்டையோன்னு பயந்துாட்டேன்” அவள் கண்ணீரும் எச்சிலும் கன்னத்தை நினைத்தன.

நான் எழுந்திருக்க முயன்றேன். “உஷ்—” அவள் என்னை மெதுவாய் மறுபடியும் படுக்கையில் தள்ளினாள்.

“காப்பி சுடச் சுடக் கொண்டு வந்திருக்கிறேன், ஒரு வாய் குடி. சும்மா படுத்துக்கோ; இப்போ எழுந்திருக்க வேண்டாம்.”

படபடவென மும்முரமாய் மழைச்சாரல் இறங்கிக் கொண்டிருந்தது. கோடை மழை. ஜன்னல் கதவுகள் படபடவென புத்தகத்தின் ஏடுகள் போல் அடித்துக் கொண்டன.

“ஒரு நிமிஷம் இதோ வந்தூட்டேன்.”

எல்லா ஜன்னல்களையும் இழுத்து முடிக் கொக்கிகளைப் போட்டாள். அறையில் இருள் சூழ்ந்தது. நான் அவளைச் சரியாய்ப் பார்க்க முடியவில்லை. மெதுவாய் என் முகத்தைத் தொட்டாள்.

“என்மேல் கோவமா?” பூவினாற் அடித்தாற்போல் அவள் குரல் என்மேல் மெத்தென இறங்கிற்று.

“No my dear...... ” நிஜமாகவே எனக்கு ஏன் கோபம் வரவில்லை?

“விண்—விண்” மண்டையுள் யாரோ சுத்தியால் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

“வால்மீகி, நீ ஏன் சில சமயங்களில் புரியாதபடி நடந்துகொள்கிறாய்?”

எனக்கும்தான் தெரியவில்லை.

“காயத்ரீ!”

அ.—13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/203&oldid=1033497" இருந்து மீள்விக்கப்பட்டது