பக்கம்:அஞ்சலி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 197

“வால்மீகி”

“...........”

“வால்மீகி!!”

“...........”

“தூக்கமா?”

“இல்லை. என்ன?”

“நான் கர்ப்பமாயிருக்கிறேன்.”

அவள் குரல் நிதானமாய்ப் பூரண வடிவுடன் இருளிலிருந்து பிரிந்து வந்தது.

கடிகாரத்தின் வினாடிகள் ஒன்றன்பின் ஒன்றாய்த் தம்மைச் சொடுக்கிக்கொண்டு சுவரிலிருந்து புறப்பட்டு இருளோடு கலந்தன.

“வால்மீகி நீ ஏதாவது சொன்னாயா?”

“இல்லை. ஆனால் நீ சொல்லியது நல்ல விஷயம்” என்றேன்.

“எனக்குப் பிடிக்கல்லே” என்று சிணுங்கினாள்.

“எல்லோருக்கும் இப்போ அப்படித்தான் இருக்குமோ என்னவோ?” என்றேன்.

“அப்படியில்லை. எனக்கு நிஜமாவே, எப்பவுமே பிடிக்கல்லே. பார் இன்னும் கொஞ்சநாளில் வயிறு அசிங்கமாய் வீங்கிவிடும்—பார்க்க சகிக்காது.”

“இப்படிப் பேசிக்கொண்டு போனால் அதற்கு எல்லையே இல்லை. உலகத்தில் எந்த உயிர் பிறந்தாலும் இந்த நிலைமைகளையும் கட்டங்களையும் அடைந்த பின் தான் வெளிப்பட்டுத்தான் தனியாகிறது. என் தாயும் அப்படித்தானிருந்திருப்பாள். நீ பிறக்கு முன் உன் தாயும் அப்படித்தானிருந்திருப்பாள். நானாவது என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/207&oldid=1026387" இலிருந்து மீள்விக்கப்பட்டது