பக்கம்:அஞ்சலி.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 213

“என்னை மன்னிச்சுடு, வால்மீகி உன்னை நான் ரொம்பவும் கடுமையாய்ப் பேசிவிட்டேன்!”

வான வீதியில் வெண் மேகங்களுக்கிடையில் ஒரு நீலப்பாதை பிளந்து முன்னேறுகிறது.

எனக்கென்னவோ இன்று ரொம்பவும் அசதியாயிருக்கிறது. .

மூக்கை உறிஞ்சினாள். ஒதுங்கி எட்ட உட்கார்ந்தாள். எனக்கு அவளைத் தொட வேண்டுமென ஆசை.

சற்று நேரம் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எனக்கு ரொம்ப அலுப்பாயிருக்கிறது” என்றாள்.

“எனக்குந்தான் அலுப்பாயிருக்கிறது.”

“நான் போய்விடப் போகிறேன்.”

இந்தக் கட்டம் ஒருநாள் வரும் எனும் திகிலில் குன்றிப் போய்க் கொண்டிருந்தேன். இந்த ரூபத்தில்தான் வரும் என்று தெரியாது. ஆனால் இதுதான் என் திகில்...ஆனால் வந்தும் விட்டபின், அவள் வார்த்தைகள் சரியாய் விளங்கவில்லை.

“நீ என்ன சொல்கிறாய்? புரியவில்லை.”

“நான் போய்விடப் போகிறேன்—”

“எங்கு?”

ஏன் என்று உடனே நான் ஏன் கேட்கவில்லை? என் நெஞ்சுக்குத்தான் தெரிகிறதே! எங்கு என்கிறேன். அதுவும் அர்த்தமற்ற கேள்விதான். எங்கு போவாள்? தாய் வீட்டுக்குத்தான்.

வெளியே மரங்கள் அசைந்தன. அவள் எனக்கு இன்னும் நேர்முகம் கொடுக்கவில்லை.

“காயத்ரீ நீ சொல்வதன் விபரீதம் உனக்கு விளங்குகிறதா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/223&oldid=1033511" இலிருந்து மீள்விக்கப்பட்டது